வணிகம்
அமானா வங்கி 2024 இல் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது

Apr 12, 2025 - 09:29 AM -

0

அமானா வங்கி 2024 இல் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது

அமானா வங்கி பிஎல்சி, 2024 ஆம் ஆண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்ததுடன், வரிக்கு பிந்திய இலாபமாக 28%உயர்வை பதிந்து ரூ. 1.8 ஐ எய்தியிருந்தது. இந்தப் பெறுமதி 2023 ஆம் ஆண்டில் ரூ. 1.4 பில்லியனாக பதிவாகியிருந்தது. ஆரோக்கியமான 21% வளர்ச்சியை பிரதிபலித்து, அக்காலப்பகுதிக்கான வரிக்கு முந்திய இலாபம் ரூ. 2.3 பில்லியனிலிருந்து ரூ. 2.8 பில்லியனாக உயர்வடைந்திருந்தது. 

குறைவடைந்திருந்த சந்தை வட்டி வீதங்களின் தாக்கங்கள் நிலவிய போதிலும், உறுதியான வருமான வினைத்திறனை பதிவு செய்திருந்தது. வங்கி ஆரோக்கியமான நிதிவசதியளிப்பு எல்லைப் பெறுமதியான 4.0% ஐ பேணியிருந்ததுடன், வங்கியின் தேறிய நிதிவசதியளிப்பு வருமானம் 6%இனால் உயர்ந்து ரூ. 6.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 6.5 பில்லியனாக பதிவாகியிருந்தது. 

எமது பெறுமதி வாய்ந்த சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களால் உருவாக்கப்பட்ட பெறுமதிகளின் அடிப்படையிலும், அதிகரித்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் இதர பெறுமதி சேர் சேவைகள் போன்றவற்றினூடாக, வங்கியின் தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 16% இனால் உயர்ந்து, 1 பில்லியன் மைல்கல்ல கடந்து ரூ. 1.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. மிகை அமெரிக்க டொலர்கள் திரள்வு நிலை காணப்பட்ட சூழலில், வங்கி வியாபார வருமானமாக ரூ. 0.7 பில்லியனை பதிவு செய்திருந்தது. தொழிற்பாட்டு சூழல் மற்றும் சொத்தின் தரம் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் பதிவாகியிருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் உரிய நேர ஈடுபாடுகள் போன்றவற்றில் முன்னேற்றங்கள் பதிவாகியிருந்த நிலையில், வங்கியின் மதிப்பிறக்க கட்டணங்கள் 86%இனால் குறைந்து, ரூ. 2.1 பில்லியனிலிருந்து ரூ. 0.3 பில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக வங்கியின் தேறிய தொழிற்பாட்டு வருமானம் 18% இனால் அல்லது ரூ. 1.3 பில்லியனால் உயர்ந்து ரூ. 8.4 பில்லியனாக பதிவாகியிருந்தது. 

வங்கியின் சென்றடைவு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய செலவுகள் போன்றவற்றுடன் தொடர்புடைய செலவுகள் அதிகரித்திருந்த போதிலும், வரவுக்கான செலவு விகிதத்தை 53% ஆக வங்கி பேணியிருந்ததுடன், பெறுமதி சேர் வரிக்கு முன்னதான தொழிற்பாட்டு இலாபம் 18% அதிகரிக்கவும், 2023 ஆம் ஆண்டில் பதிவாகிய ரூ. 3.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ. 3.8 பில்லியனாக பதிவாக ஏதுவாக அமைந்திருந்தது. வங்கியின் திரண்ட வரி பங்களிப்பான ரூ. 2.0 பில்லியன் ஊடாக வங்கியின் மொத்த வரிகளுக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபத்தின் 53%ஐ பதிந்திருந்தது. 

வங்கியின் மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரிக்கான அதிகரித்துச் செல்லும் கேள்வியின் பெறுபேறாக, வாடிக்கையாளர் முற்பணங்கள் 24% இனால் அல்லது ரூ. 21.6 பில்லியனால் உயர்ந்து ரூ. 100 பில்லியன் அளவை கடந்திருந்தது. 2024 ஆண்டின் இறுதியில் 111.3 பில்லியன் இருப்பை கொண்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தப் பெறுமதி ரூ. 89.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. தொழிற்துறையில் மிகவும் குறைந்த நிலை 3 மதிப்பிறக்க நிதிவசதியளிப்பு விகிதமான 1.3% ஐ பேணியிருந்ததனூடாக, இந்த வினைத்திறன் எய்தப்பட்டிருந்தது. வங்கியின் வினைத்திறனான இடர் முகாமைத்துவம் மற்றும் காப்புறுதி வழங்கல் கட்டமைப்பு போன்றவற்றினால் இந்த பெறுமதியை எய்த முடிந்தது. வங்கியின் மக்களுக்கு நட்பான வங்கியின் வழிமுறை மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட செயற்பாடுகள் போன்றவற்றினூடாக இந்த பெறுபேறு எய்தப்பட்டிருந்தது. 

150 பில்லியன் மைல்கல்லை கடந்து, வாடிக்கையாளர் வைப்புகள் 16% அல்லது ரூ. 21.5 பில்லியன் எனும் பெறுமதியால் உயர்ந்து, ரூ. 154.4 பில்லியனாக பதிவாகியிருந்தமையுடன், தொழிற்துறையின் உயர் CASA விகிதமான 44% ஐயும் பேணியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வங்கியின் மொத்த சொத்துகள் ரூ. 22.9 பில்லியனால் உயர்ந்து அல்லது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14%இனால் உயர்ந்து, 2023 டிசம்பர் மாதத்தில் பதிவாகியிருந்த ரூ. 159.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 2024 டிசம்பர் மாதத்தில் ரூ. 182.3 பில்லியனாக பதிவாகியிருந்தது. பங்கின் மீதான வங்கியின் வருமதி மற்றும் சொத்தின் மீதான வருமதி போன்றன முறையே 8.0% மற்றும் 1.6% இனால் அதிகரித்திருந்தது. மேலும், அமானா வங்கியின் பொது பங்கு நிலை 1 விகிதம் 15.0%ஆக காணப்பட்டதுடன், மொத்த மூலதன விகிதம் 17.6% ஆக காணப்பட்டது. ஒழுங்குபடுத்தலின் ஆகக்குறைந்த தேவைப்பாடான 7% மற்றும் 12.5% ஆகியவற்றை விட உயர்வானதாக அமைந்திருந்தது. 

2024 ஆம் ஆண்டில், வங்கியின் நிதிசார் வலிமையை உறுதி செய்யும் வகையில், ஃபிட்ச் ரேட்டிங்ஸ் ஸ்ரீ லங்காவினால் அமானா வங்கியின் நீண்ட கால கடன் தரப்படுத்தல் BB+(lka)இலிருந்து உறுதியான புறத்தோற்றப்பாட்டுடனான முதலீட்டு தர BBB-(lka) ஆக உயர்த்தப்பட்டிருந்தது. அதனூடாக, வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. வங்கியின் உறுதித்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்பு போன்றவற்றை உறுதி செய்து, லங்கா ரேட்டிங் முகவர் அமைப்பினால், தமது ஆரம்ப மதிப்பாய்வில், அமானா வங்கிக்கு தேசிய நீண்ட கால தரப்படுத்தலாக BBB+ஐ உறுதியான புறத்தோட்டப்பாட்டுடன் வழங்கியிருந்தது. தனது வலிமை மற்றும் தொழிற்துறை தலைமைத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்தி, அமானா வங்கி உலகின் சிறந்த 25 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக த ஏசியன் பாங்கரினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டில் இந்த தரப்படுத்தல் 37 ஆம் இடத்தில் காணப்பட்டதுடன், கடந்த ஆண்டில் இந்த தரப்படுத்தல் 24 ஆம் இடத்துக்கு உயர்ந்திருந்தது. 

தனது பங்குதாரர்களுக்கு பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அமானா வங்கி தனது 7ஆவது தொடர்ச்சியான பங்கிலாபத்தை 2024 இல் பிரகடனம் செய்திருந்தது. இதுவரையில் செலுத்தப்பட்ட அதியுயர் பெறுமதி வாய்ந்த பங்கிலாப வழங்கலாக இது அமைந்திருந்தது. மொத்தமாக ரூ. 661 மில்லியன் தொகை பகிரப்பட்டதுடன், 2023ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட தொகையை விட இரட்டிப்பு பெறுமதியானதாக அமைந்திருந்தது. 

வங்கியின் 2024 ஆம் ஆண்டின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “முன்னேற்றமடைந்து வரும் தொழிற்பாட்டு மற்றும் பொருளாதார சூழலில் அமானா வங்கி மீண்டும் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. அதனூடாக எமது பிரத்தியேகமான வங்கியியல் மாதிரியின் மீட்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எமது தொடர்ச்சியான வளர்ச்சி, உறுதியான நிதி நிலை மற்றும் கடன் தரப்படுத்தல் முகவர் அமைப்புகளின் ஏற்றுக் கொள்ளல் நிலை போன்றவற்றினால் எம்மீது எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனது சக பணிப்பாளர்கள், எமது நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டுக்கு எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் எம்மீது கொண்டுள்ள ஒப்பற்ற நம்பிக்கை மற்றும் ஆதரவுக்காகவும் நன்றி தெரிவிக்கிறேன். நாம் முன்னேறுகையில், நிலைபேறான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் நாம் சேவையாற்றுவோருக்கு பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்க அர்ப்பணித்துள்ளோம்.” என்றார். 

முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “முன்னேற்றம் கண்டு வரும் பொருளாதார சூழலில், அமானா வங்கியினால் வளர்ச்சியை துரிதப்படுத்தி, பிரதான மைல்கற்களை கடந்து எமது சந்தை நிலையை வலிமைப்படுத்த முடிந்திருந்தது. எமது வினைத்திறனினூடாக, வாடிக்கையாளரை மையப்படுத்திய வங்கியின் ஒப்பற்ற நோக்கு, முறையான இடர் முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு சிறப்பு போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்தன. எமது தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை வழங்கிய மேற்பார்வை வழிகாட்டல்களுக்காக நான் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புவதுடன், எமது முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் ஒப்பற்ற முயற்சி மற்றும் பங்காளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பெறுமதியான பங்காளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் பற்றுறுதிக்காகவும் நன்றி தெரிவிக்கிறேன். தொடர்ச்சியான எமது சென்றடைவை நாம் வியாபிக்கும் நிலையில், எம்முன்னே காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைவதுடன், எமது பெறுமதி வழங்கலை மேம்படுத்தி, எம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய நிதிசார் பங்காளராக தொடர்ந்தும் நிலைத்திருப்போம்.” என்றார். 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. 

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05