Apr 12, 2025 - 09:44 AM -
0
லிங்க் கேஷா வர்த்தகநாமத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைவரதும் எதிர்பார்ப்புக்குரிய புத்தாண்டு அழகி நிகழ்வான லிங்க் கேஷ குமரிய 2025, அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நிறைவடைந்திருந்தது. தொடர்ச்சியாக 3ஆவது வருடமாக இடம்பெற்ற இந்த நிகழ்வானது, இலங்கைப் பெண்களின் பன்முக அழகை மேம்படுத்துவதற்கும், அவர்களை ஊக்குவிப்பதற்கும் மற்றும் கொண்டாடுவதற்குமான ஒரு தளம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
2,000 இற்கும் அதிக விண்ணப்பங்களின் மூலம் கடந்த மார்ச் மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போட்டியானது, முக்கிய எதிர்பார்ப்பு மிக்க ஒரு நிகழ்வாக பின்தொடரப்பட்டு வந்தது. வீடியோ நேர்காணல்கள் மற்றும் நேரடி நேர்முகத் பரீட்சைகளை உள்ளடக்கிய தெரிவுச் செயன்முறை மூலம், 25 திறமையான போட்டியாளர்கள் ஆரம்ப கட்டமாக தெரிவு செய்யப்பட்டனர். இந்தப் பங்கேற்பாளர்கள் நிபுணர்கள் தலைமையிலான அழகுபடுத்தல் மற்றும் ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியை பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் 15 பேரரை தேர்ந்தெடுக்கும் மட்டத்திற்கு அது முன்னேறியது. Manhunt International மற்றும் Face of Beauty International Sri Lanka ஆகியவற்றின தேசிய பணிப்பாளரான அர்ஜுன சேனநாயக்கவின் நிபுணத்துவம் மிக்க நடனக் கலையின் கீழ், போட்டியாளர்கள் நம்பிக்கை மிக்க இளம் யுவதிகளாக தங்களை மேம்படுத்தி, போட்டியின் மையத் தளமான மேடைக்கு வரத் தயார்படுத்தப்பட்டனர்.
லிங்க் கேஷா பேஸ்புக் பக்கம் மற்றும் லிங்க் நெச்சுரல் யூடியூப் சனல் போன்ற சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட லிங்க் கேஷ குமரிய 2025 நிகழ்வின் பிரமாண்டமான இறுதிப் போட்டியானது, திறமை, கருணை, நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. திறமை வாய்ந்த இறுதிப் போட்டியாளர்களிலிருந்து வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் பணியை கலைத்துறை பிரபலங்களான நயன குமாரி, சுலக்ஷி ரணதுங்க, சங்க தினத் ஆகியோர் அடங்கிய மதிப்புமிக்க நடுவர் குழாம் மேற்கொண்டிருந்தது. இவ்வருடம் எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த வினோலி விமோக்ஷா போட்டியின் வெற்றியாளராக தெரிவானதோடு, ரூ.100,000 பணப் பரிசையும் அவர் வென்றார். காலியைச் சேர்ந்த ரஷினி காவிந்தி ரூ.75,000 பணப் பரிசைப் பெற்று இரண்டாம் இடத்தையும், கொட்டாவவைச் சேர்ந்த ஹர்ஷி துலாஞ்சலி ரூ.50,000 பணப் பரிசைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.
அது மாத்திரமன்றி, இந்நிகழ்வில் அழகான புன்னகை அழகி விருது மற்றும் மிகவும் பிரபலமான அழகி விருது ஆகிய இரண்டு பட்டங்களும் வழங்கப்பட்டன. அழகான புன்னகை அழகி விருதை லிங்க் சுதந்த வழங்கியதோடு, வெற்றியாளரை நடுவர்கள் தெரிவு செய்திருந்தனர். மிகவும் பிரபலமான அழகி விருது வென்றவர் பொதுமக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்த நிகழ்வு மக்களின் மனதைத் தொடும் வகையில் அமைந்திருந்தது. அழகான புன்னகை அழகி விருதை பன்னிபிட்டியவைச் சேர்ந்த தருஷா நிபுணி வென்றதோடு, ஆனமடுவையைச் சேர்ந்த ரித்மி நவஞ்சனா மிகவும் பிரபலமான அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கேஷ குமரிய 2025 போட்டி குறித்து கருத்து வெளியிட்ட Link Natural Products (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷான் ரன்சிலிகே, "பாரம்பரியமாக வேரூன்றி, ஆயுர்வேதத்தின் ஞானத்தையும் நவீன விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட லிங் கேஷா இலங்கை தலைமுறையின் நம்பிக்கைக்குரிய ஒரு வர்த்தகநாமமாகும். லிங்க் கேஷ குமரிய போட்டியின் மூலம், இளம் பெண்கள் நம்பிக்கையுடனும் கருணையுடனும் மேம்படுவதனை வலுவூட்டும் ஒரு அர்த்தம்மிக்க தளத்தை நாம் உருவாக்கியுள்ளோம். இவ்வருடம், அவர்களின் கதைகளை நாம் மேலும் ஆழமாக அறிந்துகொண்டதோடு, அவர்களின் திறமையை வளர்த்து, அவர்களின் உணர்வுகளைக் கொண்டாடினோம். இவ்வேளையில் வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தப் பயணத்தை உண்மையிலேயே மறக்கமுடியாத ஒன்றாக மாற்றிய போட்டியாளர்களின் பெற்றோருக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்." என்றார்.
Link Natural Products (Pvt) Ltd. நிறுவனத்தால் இலங்கையின் முதலாவது வர்த்தகநாமம் கொண்ட கூந்தல் ஒயில்களில் ஒன்றான லிங்க் கேஷா, 1997 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வீட்டுப் பெயராகத் திகழ்ந்து வரும், இயற்கை மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய லிங்க் கேஷா, உச்சந்தலையை செழிப்பூட்டி, கூந்தலின் இயற்கை அழகைப் பேணி, தலைமுறை தலைமுறையாக இலங்கையிலுள்ள அனைத்து தரப்பு பெண்களிடையேயும் தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறது.
லிங்க் கேஷ குமரிய 2025 நிகழ்வானது, வெற்றியாளர்களுக்கு ஒரு முக்கிய தருணத்தை வழங்கியதற்கு அப்பால், தமது வாழ்வின் முன்னேற்றத்தைக் கண்ட ஒவ்வொரு பெண்ணின் கொண்டாட்டமாகவும் அமைந்திருந்தது. இவ்வாறான தளத்தின் மூலம், இலங்கைப் பெண்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும், அவர்களை வலிமையாகவும், அழகாகவும், தாங்கள் யார் என்பதில் அவர்கள் பெருமைப்படவும் செய்வதில் லிங்க் கேஷா தனது ஆழமான அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகின்றது.