Apr 12, 2025 - 09:50 AM -
0
NDB வங்கியானது இலங்கையின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துவதற்கான தனது தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் மற்றொரு வெளிப்பாடாக ஏப்ரல் 4, 2025 அன்று மற்றொரு வெற்றிகரமான ஏற்றுமதியாளர் ஒன்றுகூடலை நடத்தியது. வடமேல் பிராந்தியத்தின் மையப்பகுதியான குருநாகலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏற்றுமதியாளர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் கலந்து கொண்டதுடன் அவர்கள் ஏற்றுமதியாளர்களின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் NDB இன் வர்த்தக வங்கி சேவைகளின் மூலோபாய பங்கு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த ஒன்று கூடலானது ஏற்றுமதிசெயற்பாடுகளில் ஈடுபட விரும்பும் உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் [SME] திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு முக்கியமான அறிவுப் பகிர்வு தளமாக செயல்பட்டது. அத்துடன் NDBயின் தலைமைக் குழுவானது வளர்ந்து வரும் உலகளாவிய சந்தையில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் வளர்ச்சியடையச் செய்வதற்கு உதவுவதற்கு அவசியமான நிதியியல் தீர்வுகள், ஆலோசனை சேவைகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான ஆதரவு ஆகியவற்றை வழங்கியது.
இந்த ஒன்று கூடல் நிகழ்வானது NDB-யின் SME, நடுத்தர சந்தைகள் மற்றும் வர்த்தக வங்கியியல் துணைத் தலைவர் திரு. இந்திக ரணவீரவின் வரவேற்பு மற்றும் நிகழ்வு அறிமுகத்துடன் ஆரம்பமானது. அவர் இலங்கையின் ஏற்றுமதியாளர் தளத்தின் வளர்ச்சியை எளிதாக்குவதில் வங்கியின் நீண்டகால முயற்சிகளை பற்றி எடுத்துரைத்தார். மேலும் NDB வங்கியானது ஏற்றுமதியாளர்கள் சர்வதேச அளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதியாளர்களாக மேம்படுத்தும் வகையில் வர்த்தக வங்கியியல் வாடிக்கையாளர்களை ஆதரிப்பதில் மேற்கொள்ளும் முலோபாய யுக்திகள் தொடர்பாக வும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் முக்கிய அதிதி பேச்சாளராக தொழில்துறை உற்பத்திகள் பணிப்பாளர் திருமதி மனோஜா திசாநாயக்க கலந்து கொண்டார், அவர் இலங்கையின் தொழில்துறை திறன்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் தமது சலுகைகளை உலகளாவிய தேவை போக்குகளுக்கு ஏற்ப எவ்வாறு சீரமைக்க முடியும் என்பது குறித்து தனது உரையில் எடுத்தியம்பினார்.அவரது உரை நாட்டின் தொழில்துறை ஏற்றுமதி திறனை அதிகரிக்க மீள்தன்மை, தயாரிப்பு கண்டுபிடிப்பு மற்றும் நிறுவன ஆதரவின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியது. மேலும் அவர் தனது உரையில் நாட்டின் தொழில்துறை ஏற்றுமதி ஆற்றலை அதிகரிப்பதற்கு மீள்எழுச்சி, புத்தாக்க உற்பத்தி மற்றும் நிறுவனத்தின் ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார்.
இதனையடுத்து வர்த்தக நிதி, திறைசேரி முகாமைத்துவம், பரிவர்த்தனை வங்கியியல் மற்றும் ஏற்றுமதி வசதிகள் தொடர்பான முக்கியமான தலைப்புகளில் சிந்தனையைத் தூண்டும் குழு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்தக் குழுவில் SME, நடுத்தர சந்தைகள் மற்றும்வர்த்தக வங்கியியலின் துணைத் தலைவர் திரு. இந்திக ரணவீர, திறைசேரியின் துணைத் தலைவர் திரு. தமித சமரநாயக்க மற்றும் பரிவர்த்தனை வங்கியியல் மற்றும் வர்த்தக செயல்பாடுகள் உதவி துணைத் தலைவர் திரு. திலங்க எஸ். வீரசிங்க ஆகியோர் உட்பட NDB வங்கியின் சிரேஷ்ட தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களுடன் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் [EDB) பிராந்திய அபிவிருத்தி பணிப்பாளர் திரு. டி.எம்.பி. திசாநாயக்க இணைந்து கலந்துரையாடலில் தேசிய கொள்கை பற்றி எடுத்துரைத்தார். இந்த அமர்வை NDB இன் பிரதம முகாமையாளர் / வர்த்தக வங்கியியலின் வலயத் தலைவர் திரு. நீலேந்திர விதானகே நிபுணத்துவத்துடன் நெறியாண்டிருந்தார்.
இந்த கலந்துரையாடலானது NDB இன் முழு அளவிலான வர்த்தக வங்கியியல் தீர்வுகளின் ஆதரவுடன், ஆரம்ப சந்தை நுழைவிலிருந்து சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் பரிமாற்ற இடர்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் உலகளவில் அளவிடுதல் வரை ஏற்றுமதி பயணத்தை வழிநடத்துதல்தொடர்பான செயல்பாட்டு அறிவினை பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது.
இந்த ஒன்றுகூடலின் மூலம், வலுவான நிதியியல் கருவிகளுடன் மட்டுமல்லாமல், அறிவு, வழிகாட்டுதல் மற்றும் மூலோபாய பங்குடைமை ஆகியவற்றின் பரந்த சுற்றுச்சூழல் அமைப்புடன் இலங்கை ஏற்றுமதியாளர்களை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை NDB வங்கி மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது. நாடு அதன் ஏற்றுமதியை முன்னிறுத்தி வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லும்போது, NDB அதன் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு, மீளெழுச்சி மற்றும் நீண்டகால வெற்றியை உறுதி செய்யும் ஒரு பலமான செயலாக்க அமைப்பாக திகழ்கிறது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.