Apr 12, 2025 - 10:24 AM -
0
கொமர்ஷல் வங்கியானது 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக LMDயினால் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான கொமர்ஷல் வங்கியானது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்த விருதினை பெறுகிறது.
LMD சஞ்சிகையின் ஆய்வு மற்றும் நிறுவனத்தின் சரிபார்ப்பின் அடிப்படையில். LMD இன் கூற்றுக்கிணங்க, கொமர்ஷல் வங்கி மொத்தம் 115 விருதுகளுடன் நாட்டின் சிறந்த பெருநிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
எமது ஆய்வானது 496 விருது பெற்ற நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளதுடன் இந்த எண்ணிக்கையானது முந்தைய பதிப்பில் இடம்பெற்ற 227 நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாகும். மொத்தமாக 2,831 விருதுகளைப் பெற்றுள்ளது, என்று LMD தெரிவித்துள்ளது. LMD இன் 2024 சிறப்பு பதிப்புகளில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் வென்ற விருதுகளின் விரிவான பட்டியலை இந்த ஆய்வு தொகுத்துள்ளதாக LMD சஞ்சிகை தெரிவித்துள்ளது. அதாவது வருடாந்த வர்த்தக நாமம், மிகவும் மதிக்கப்படும், பெருநிறுவனப் பிரிவு (இதில்பெரு நிறுவன மகிழ்ச்சி குறியீடு அல்லது CHI மற்றும் இலங்கையில் சிறந்த பணியிடங்கள் அடங்கும்) மற்றும் LMD 100 (2023/24).
இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான திரு. சனத் மனதுங்க, கொமர்ஷல் வங்கி பல ஆண்டுகளாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற வங்கியாகத் திகழ்ந்து வருகிறது. செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் இணக்கம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களுக்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுகள் கொமர்ஷல் வங்கி குழுவிற்கு கௌரவத்தை வழங்குகின்றன.மேலும் இவ்விருதுகள் எமது சேவைகளின் தரம் மற்றும் அனைத்து பங்குதாரர் பிரிவுகளின் மாறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான எமது அர்ப்பணிப்பு செயற்பாடுகளுக்கு சான்றாக திகழ்வதுடன் புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் இத்தகைய விருதுகள் மற்றும் பாராட்டுகள், ஒரு நிறுவனத்தின் சிறப்பு, நேர்மை மற்றும் அதன் நற்பெயரை வலுப்படுத்தும்.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100% கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக Tier I ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.