Apr 12, 2025 - 10:32 AM -
0
NDB வங்கியானது அண்மையில் கொழும்பு, சினமன் லைஃப் - வோட்டர்ஃபிரண்டில் நடைபெற்ற இலங்கை தொழில்சார் வங்கியாளர்கள் சங்கத்தின் (APB) 35 ஆவது ஆண்டு விழாவில் சங்கத்தின் பங்குதாரராக பெருமிதத்துடன் பங்கேற்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்தல் மற்றும் நிலையான மீட்சி மற்றும் வளர்ச்சியில் வங்கியின் பங்கு எனும் கருப்பொருளில் நடைப்பெற்ற இந்த மைல்கல் நிகழ்வானது இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக இணைந்து பணியாற்றும் வகையில் பிரதம நிறைவேற்றதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் உட்பட 300க்கு மேற்பட்ட வங்கியியல் தொழில்சார் நிபுணர்களை ஒன்றிணைப்பதாக அமைந்திருந்தது.
1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட APBயானது வங்கியியல் துறையில் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வங்கியியல் தொழில்தகைமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான தொழில்சார் அமைப்பாக திகழ்கிறது, இந்த அமைப்பானது அறிவை மேம்படுத்தவும், புத்தாக்கங்களை விருத்தி செய்வதற்கும் மற்றும் நிதியியல் துறையில் தலைமைத்துவத்தை அபிவிருத்தி செய்யவும் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது. கடந்த 35 ஆண்டுகளில், APB வருடாந்த மாநாடானது , தொழில்சார் உரையாடல்கள், அறிவுப் பகிர்வு மற்றும் தொழில்சார் அபிவிருத்தி ஆகியவை தொடர்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாக மாறியுள்ளது.இந்த வருடத்திற்கான மாநாட்டின் தேசிய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
APB உடனான இந்த பங்குடைமையானது, NDB வங்கியின் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும் தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்களை மேம்படுத்துவதற்குமான நோக்கத்துடன் வலுவாக இணங்குவதுடன் எதிரொலிப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குகிறது. ஒரு மூலோபாய பங்குதாரராக இந்த நிகழ்வை ஆதரிப்பதுடன் மட்டுமல்லாமல், NDB வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான திரு.கெலும் எதிரிசூரிய நிதியியல் துறையின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற குழு கலந்துரையாடலில் பங்கேற்றார். இந்த குழு கலந்துரையாடலில் இலங்கையின் பொருளாதாரத்தை நீண்டகால மீளெழுச்சியை நோக்கி வழிநடத்துவதற்கான நடைமுறை யுக்திகள் மற்றும் கொள்கை கட்டமைப்புகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இந்த கலந்துரையாடல்கள் புத்தாக்கமான டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகள் முதல் வளர்ச்சியை நிலைத்தன்மையுடன் சமநிலைப்படுத்தும் இடர் முகாமைத்துவ அணுகுமுறைகள் வரை ஆராய்வதாக அமைந்திருந்தன.
இலங்கையின் வங்கி சமூகத்தின் கூட்டு வலிமை மற்றும் புதுமைகளை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க மாநாட்டை நடத்தியதற்காக தொழில்சார் வங்கியாளர்கள் சங்கத்திற்கு NDB வங்கி தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பது, சமூகங்களை மேம்படுத்துவது மற்றும் இலங்கைக்கு மிகவும் வளமான எதிர்காலத்தை வடிவமைப்பது என்ற எமது பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையில் APB மற்றும் பிற தொழில்பங்காளர்களுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

