செய்திகள்
உழவு இயந்திரத்துடன் மோதி முதியவர் பலி

Apr 12, 2025 - 10:43 AM -

0

உழவு இயந்திரத்துடன் மோதி முதியவர் பலி

இன்று (12) அதிகாலை ஒரு மணியளவில் பலாலி வீதி வடக்கு புன்னாலை கட்டுவன் முகவரியில் அமைந்துள்ள, புன்னாலை கட்டுவன் சித்திவிநாயகர் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பலாலியில் இருந்து யாழ்பாணம் நோக்கி இடது பக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன், பின்பக்கமாக மோட்டார் வாகனத்தில் பயணித்த முதியவர் ஒருவரே இவ்வாறு மோதி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் பலாலி கிழக்கு வசாவிளான் பகுதியினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தேகத்தின் அடிப்படையில் உழவு இயந்திரத்தின் சாரதியான 27 வயது இளைஞன் ஒருவனை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இதேவைளை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கந்தவர்ணம் செல்வநாயகம் என்ற 62 வயதான முதியவரின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05