செய்திகள்
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

Apr 12, 2025 - 07:52 PM -

0

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

2025 ஏப்ரல் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் செயற்பாடு நண்பகல் 12 மணிவரை மட்டுமே இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. 

ஒரு நாள் சேவைக்காக நடைமுறையில் உள்ள 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இடம்பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடிவரவு மற்றும் குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05