Apr 12, 2025 - 08:56 PM -
0
மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனமான வட்ஸ்அப் செயலி இன்று (12) உலகளவில் பல பயனர்களுக்கு செயலிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சுமார் 88 சதவீத பயனர்கள் வட்ஸ்அப் குழுக்களில் தங்கள் செய்தியை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 சதவீத பயனர்கள் பயன்பாட்டிலேயே சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும், உள்நுழைவு சிக்கல்களுக்கு முகங்கொடுத்த 2 சதவீதத்தினரும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

