Apr 13, 2025 - 06:14 AM -
0
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜெய்ர் போல்சனாரோ.
இவர் நேற்று முன்தினம் வடகிழக்கு பிரேசிலில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அவரது அரசியல் கட்சி தெரிவித்தது.
வடகிழக்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ நோர்டேவில் உள்ள ஒரு சிறிய நகரமான சாண்டா குரூசில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வலி கடந்த 2018 செப்டம்பரில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட கத்திக்குத்தின் நீண்டகால விளைவுகளுடன் தொடர்புடையது என அவரது லிபரல் கட்சி தெரிவித்தது.
வைத்தியசாலையில் போல்சனாரோவை கண்காணித்து வரும் மருத்துவக் குழு, அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அறுவை சிகிச்சைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவித்தது.