Apr 13, 2025 - 10:57 AM -
0
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 10ஆம் திகதி உலகம் முழுவதும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,000இற்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது, இதனால் திரைகள் மற்றும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டுமே ரூ. 30.9 கோடி (இந்திய பெறுமதி) வசூலித்தது.
இந்த நிலையில், இப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 100 கோடிக்கும் (இந்திய பெறுமதி) அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருவதால் இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.