விளையாட்டு
ஐபிஎல் ஒளிபரப்பில் ரோபோ நாய் அறிமுகம்!

Apr 13, 2025 - 07:20 PM -

0

ஐபிஎல் ஒளிபரப்பில் ரோபோ நாய் அறிமுகம்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனில் ஒரு புதுமையான அறிமுகமாக ரோபோ நாய் ஒளிபரப்பு குழுவில் இணைந்துள்ளது.

 

இந்த ரோபோ நாய், ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதனால் நடக்கவும், ஓடவும், குதிக்கவும் முடியும் மற்றும் தனித்துவமான காட்சிகளை பதிவு செய்யும் திறன் கொண்டது.

 

ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த ரோபோ நாய்க்கு பெயர் சூட்டுமாறு ஐபிஎல் நிர்வாகம் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

 

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் இந்த ரோபோ நாயுடன் பயிற்சியின் போது உரையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

ஐபிஎல் தொடர்ந்து மேம்பட்ட தொழில்நுட்பங்களை கிரிக்கெட் ஒளிபரப்பில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05