செய்திகள்
2025 தமிழ் சிங்கள புத்தாண்டு : சுப நேரங்கள் அறிவிப்பு

Apr 13, 2025 - 07:32 PM -

0

2025 தமிழ் சிங்கள புத்தாண்டு : சுப நேரங்கள் அறிவிப்பு

இலங்கையின் மிகப் பெரிய பண்பாட்டு பண்டிகையாகக் கருதப்படும் சிங்கள தமிழ் புத்தாண்டு, பாரம்பரிய சடங்குகள் மற்றும் சுப நேரங்களுக்கும்  முக்கியத்துவம் அளித்து கொண்டாடப்படுகிறது.


அதன்படி, 2025 ஆம் ஆண்டு சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான சுப நேரங்கள் மற்றும் சடங்குகள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளன.


புத்தாண்டு சுப நேரங்கள் மற்றும் சடங்குகள்


புண்ணிய காலம் : புத்தாண்டு பிறப்பதற்கு முன், நடுநிலை நேரமாக அறியப்படும் புண்ணிய காலம் இன்று (ஏப்ரல் 13) இரவு 8:57 மணி முதல் நாளை (ஏப்ரல் 14) காலை 9:45 மணி வரை உள்ளது.


புத்தாண்டு பிறப்பு : சிங்கள தமிழ் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) திங்கட்கிழமை அதிகாலை 3:21 மணிக்கு பிறக்கிறது.


அடுப்பு பற்றவைத்தல்: இந்த ஆண்டு உணவு தயாரிக்கும் சுப நேரம் ஏப்ரல் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4:04 மணிக்காகும்.


செம்பு நிற ஆடைகளை அணிந்து, தெற்கு திசையை நோக்கி அடுப்பு பற்றவைத்து, பாற்சோறு, இனிப்பு வகைகள், பால் மற்றும் பிற பலகாரங்களை தயாரிக்க வேண்டும் என்று புத்தாண்டு சுபவேளை குறிப்புப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பணிகளைத் தொடங்குதல் மற்றும் உணவு உண்ணுதல்: புதிய ஆண்டில் பணிகளைத் தொடங்குவதற்கும், உணவு உண்பதற்குமான சுப நேரம் ஏப்ரல் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6:44 மணியாகும்.


முத்து மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, தெற்கு திசையை நோக்கி பணிகளைத் தொடங்கி, உணவை உண்ண வேண்டும் என்று புத்தாண்டு சுபவேளை குறிப்புப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தலைக்கு எண்ணெய் தேய்த்தல் சடங்கு : புத்தாண்டு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் சடங்கு ஏப்ரல் 16 ஆம் திகதி புதன்கிழமை காலை 9:04 மணிக்காகும்.


தொழிலுக்கு புறப்படுதல் : தொழில் மற்றும் பயணங்களுக்காக புறப்படுதலுக்கான சுப நேரம் ஏப்ரல் 17 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9:03 மணியாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05