பல்சுவை
விளையாட்டால் வந்த வினை

Apr 14, 2025 - 10:46 AM -

0

விளையாட்டால் வந்த வினை

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் 18 வயது இளைஞனை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கஜூரி கிராமத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் விளையாட்டுத்தனமாக தனது தாத்தாவின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனது பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளான்.

 

பெற்றோர் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற நிலையில் அங்கு வீட்டில் தனியாக தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டியை பார்த்துகொண்டுருந்த 18 வயது இளைஞன் முகமது கைஃப்பை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளான்.

 

அப்போது சிறுவனின் விரல் தவறுதலாக துப்பாக்கி டிரகரில் பட்டு இளைஞன் மீது குண்டு பாய்ந்துள்ளது. இதில் அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். துப்பாக்கி சுடப்பட்ட சத்தம் கேட்டு அக்கபக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சிறுவன் அதிர்ச்சியில் மயங்கிய நிலையிலும், இளைஞன் உயிரிழந்த நிலையிலும் இருப்பதை கண்டனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் துப்பாக்கியை கைப்பற்றி இளைஞனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05