Apr 14, 2025 - 12:42 PM -
0
தளபதி விஜய், ரகுவரன், ஜெனிலியா, வடிவேலு, சந்தானம், பிபாஷா பாசு என நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சச்சின்.
இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருந்தார். இப்படத்திற்கு டிஎஸ்பி இசையமைத்திருந்தார். 2005 இல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றியடைந்த இப்படத்தை, தற்போது 20 ஆண்டுகள் கழித்து தயாரிப்பாளர் தாணு ரீ ரிலீஸ் செய்கிறார்.
ஆம், வருகிற ஏப்ரல் 18 ஆம் திகதி உலகளவில் சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படத்தை மீண்டும் திரையில் கண்டு மகிழ ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், ரீ ரிலீசாகும் சச்சின் திரைப்படத்தின் Trailer-ஐ தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.