Header Logo

சினிமா
ஸ்ரீயின் உடல்நிலை குறித்து தயாரிப்பாளர் விளக்கம்

Apr 14, 2025 - 01:12 PM -

0

ஸ்ரீயின் உடல்நிலை குறித்து தயாரிப்பாளர் விளக்கம்

நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

சில நாட்களாக ஸ்ரீயின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

ஸ்ரீயின் இந்த நிலைக்கு காரணம் அவருக்கு திரையுலகில் முறையான சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறினார்கள்.

இதனை முன்வைத்து பலரும் ‘இறுகப்பற்று’ தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபுவை கடுமையாக சாடினார்கள்.

இந்தச் சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “ஸ்ரீயின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை பற்றி நாங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளோம். நாங்கள் உட்பட அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீண்ட காலமாக தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது குறித்து ஏராளமான ஊகங்கள் பரவி வருகின்றன.

ஆனால், ஸ்ரீயை தொடர்பு கொண்டு அவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்குக் கொண்டு வருவதே முதல் முன்னுரிமை. அதை அடைய யாராவது எங்களுக்கு உதவ முடிந்தால் மிகவும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவின் மூலம் ‘இறுகப்பற்று’ தயாரிப்பு நிறுவனத்தின் மீது எழுந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.
 
Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title