Apr 15, 2025 - 11:22 AM -
0
இந்த வாரம் புத்தி சாதூரியமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம்.
குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். பெண்களுக்கு மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.
பரிகாரம் : ஸ்ரீமஹாலட்சுமியை வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்.