Apr 15, 2025 - 02:24 PM -
0
கெசல்வத்த, பீர் சாய்போ தெருவில் 13 ஆம் திகதி மதியம் கடைக்குச் சென்று கொண்டிருந்த சிறுவர்கள் குழு ஒன்று அருகிலுள்ள 3 மாடி வீட்டின் இரும்பு கதவை தட்டிவிட்டு ஓடிய சம்பவம் அருகில் இருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
அந்த நேரத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த, குறித்த வீட்டில் வசிக்கும் ஒரு இளைஞன், சிறுவனை பிடித்து வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் அழைத்துச் செல்வதும் CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
சிறுவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, பயமுறுத்துவதற்காக கதவைப் பூட்டிய அந்த இளைஞன், பின்னர் குளியலறைக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், குழந்தை வீட்டின் மூன்றாவது மாடிக்குச் சென்று, பக்கத்து வீட்டின் கூரையில் குதித்து, பின்னர் வீதிக்கு குதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 10 அடி உயரத்தில் இருந்து வீதிக்கு குதித்த சிறுவன் பலத்த காயமடைந்தள்ளதாகவும் தெரிக்கப்படுகின்றது.
சிறுவன் சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், குழந்தையை வீட்டிற்குள் சுமந்து சென்ற இளைஞன் தனது தந்தையின் தண்டனையால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், குறித்த இளைஞனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.