செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

Apr 15, 2025 - 10:15 PM -

0

மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவரை வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த இரத்தினவடிவேல் இரவீந்திரன் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.

 

கடந்த 11 ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் துவிச்சக்கர வண்டியை வீதியோரமாக நிறுத்தி நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வேளை மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்றவரை மோதி தள்ளியது.

 

அதில் குறித்த நபரும்  மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் ஆக மூவரும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (14) சிகிச்சை பலனின்றி இரவீந்திரன் உயிரிழந்துள்ளார். 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05