Apr 16, 2025 - 07:17 AM -
0
ஐபிஎல் தொடரின் 31 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் நேற்று (15) மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ஓட்டங்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 112 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களை எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதலில் துடுப்பெடுத்தாடி மிக குறைந்த ஓட்டங்களை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி செய்து 116 ஓட்டங்களை அடித்து வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே. அணியின் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.