Apr 16, 2025 - 07:23 AM -
0
இன்று (16) குரோதி வருடம் சித்திரை மாதம் 3, புதன் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் அஸ்வினி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க குடும்ப உறுப்பினர்களின் உதவி தேவைப்படும். உங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தவும். இன்று உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காதல் விஷயத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று உங்கள் வீட்டிலும், பணியிடத்திலும் இனிமையான சூழல் நிலவும். உங்களின் கற்பனை திறன் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உறவினர்களுக்கு முன் வருவீர்கள். பெரும்பாலான நேரம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக செயல்பட வாய்ப்பு கிடைக்கும். இன்று பிள்ளைகளுடன் அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் வேலையில் கவனமும், சரியான திட்டமிடலும் அவசியம். வெளியூர், வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். கோபம், எதிர்மறையான எண்ணங்களை எதிர்த்து நிதானமாக செயல்படவும். உடன் பிறந்தவர்களின் உதவியாளர் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். இன்று உங்கள் இலக்கை அடைவதில்லை வெற்றி கிடைக்கக்கூடிய நாள். சரியான திட்டத்துடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் எண்ணம், செயல்களில் கவனம் தேவை. முதலீடு சார்ந்த விஷயங்களில் நற்பலனை பெறுவீர்கள். மொத்தம் உறுப்பினர் உடன் நேரத்தில் செலவிட வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பல பிரச்சனைகள், வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். இன்று கடினமான சூழலை தவிர்க்க நிதானமும், திட்டமிடலும் அவசியம். பணம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் அதிகமாக பேசுவதை தவிர்த்து, வேலையை முடிப்பதில் கவனம் செலுத்தவும். பழைய முதலீடுகள் மூலம் இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று காதலில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களின் உதவியால் நிதி சார்ந்த சிக்கல் தீரும். உங்களின் புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வால் பிறரை ஈர்க்க முடியும். உங்கள் சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவது அவசியம் வியாபாரத்தில் நாமத்திற்கு ஆசைப்பட்டு மோசடியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். முதலீடு சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. பிறரை நம்பி ஏமாற வேண்டாம். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உண்டு. இன்று விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாள்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். இது நன்மைகள் கிடைக்கக்கூடிய நாள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று பிறரின் குறுக்கீடு உங்கள் செயலில் முட்டுக்கட்டையாக அமையும். உங்கள் முயற்சிகள் மூலம் நேர்மறையான பலனை பெறுவீர்கள். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். பிரச்சனை தீரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அதிக கவலை மற்றும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு அன்பையும் ஆதரவையும் தருவார். இன்று சிலரின் விமர்சனத்திற்கு ஆளாக வாய்ப்பு உண்டு. வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை இருக்கும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சிலரின் கண்டிப்பான அணுகுமுறை மன கவலையை தரும். இன்று நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நிதி தொடர்பான சிக்கல் ஏற்படும். நண்பர்களுடன் உற்சாகமாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவது நல்லது. உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் சரியாக பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் குடும்பத்தில் சில சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தை நம்பி உங்கள் முயற்சியை கைவிட வேண்டாம். இன்று உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடவும். இன்று சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது. இது வருங்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும். இன்று பெரிய பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். இன்று செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் பதவி உயர்வு அல்லது நிதி நன்மைகள் பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மன உறுதி அதிகரிக்கும். அதனால் பிரச்சனைகளை எளிதாக கையாளுவீர்கள்.இன்று எதிர்காலத்தில் லாபம் தரக்கூடிய விஷயங்களில் முதலீடு செய்ய நினைப்பீர்கள். ஒருவர் மீது காதல் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் அன்பு அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தியானம், யோகா போன்ற விஷயங்கள் உங்களை மேம்படுத்த உதவும். உங்களின் சேமிப்பு கடினமான நேரத்தில் உதவும். சிக்கலான விஷயங்களில் வாழ்க்கைத் துணையின் ஆதரவால் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களுக்கு உதவ முன்வருவீர்கள்.