Apr 16, 2025 - 08:54 AM -
0
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட Kahawanu Udanaya என்ற விற்பனையாளர்களுக்கு வெகுமதியளிக்கும் முயற்சியின் 1 ம் கட்டத்தை, ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாடெங்கிலுமுள்ள தனது மதிப்புமிக்க விற்பனையாளர் வலையமைப்பின் அர்ப்பணிப்பை அங்கீகரித்து, அவர்களை மேம்படுத்தி, பாராட்டும் முகமாக ஹட்ச் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் ஒரு முக்கியமான தருணமாக இந்த சாதனை மாறியுள்ளது. வெறுமனே ஒரு கொண்டாட்டம் என்பதற்கும் அப்பால், அர்த்தமுள்ள வழியில் ஊக்குவிப்புக் கொடுப்பனவுத் திட்டங்களை அறிமுகப்படுத்தல், மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்களுக்கு அங்கீகாரமளித்தல் மற்றும் பகிரப்பட்ட வளர்ச்சிக்கான கலாச்சாரத்தை வளர்த்தல் ஆகியவற்றினூடாக தனது விற்பனையாளர்களுக்கு வலுவூட்டுவதில் ஹட்ச் நிறுவனத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள நம்பிக்கைக்கு இம்முயற்சி மிகச் சிறந்த சான்றாகும். Kahawanu Udanaya மூலமாக, விற்பனையாளர்களின் வெற்றிகளைப் பாராட்டும் அதேசமயம், தனது முன்னோக்கிய பயணத்தின் முக்கிய பாகமாக, நாடளாவியரீதியில் தனது வலையமைப்பை மேலும் வலுப்படுத்துவதே ஹட்ச் நிறுவனத்தின் நோக்கம்.
கட்டம் 1 ன் நிறைவைக் குறிக்கும் வகையில், 2025 ஏப்ரல் 2 அன்று மொனார்க் இம்பீரியல் மண்டபத்தில் விமரிசையான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இதற்கு சுமார் 10,000 வரையான விற்பனையாளர்கள் பதிவுகளை மேற்கொண்டு சாதனை படைத்திருந்தனர். இந்த வகையிலான தனித்துவமான பாரிய வெகுமதித் திட்டத்தை இலங்கையில் வழங்குவதில் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்ற ஹட்ச், தனது விற்பனையாளர்களின் வெற்றி மீது காண்பிக்கும் இடைவிடாத அர்ப்பணிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலுமிருந்து விற்பனையாளர்கள் இதில் பெரும் ஆர்வத்துடன் பங்குபற்றிள்ளதுடன், ஹட்ச் நிறுவனம் நாடளாவியரீதியில் கொண்டுள்ள விசாலமான வலையமைப்பின் இருப்பின் பலத்தையும், ஐக்கியத்தையும் காண்பித்துள்ளனர்.
உச்ச மட்ட பெறுபேறுகளை வெளிப்படுத்துகின்றவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சித்திட்டமானது, ஹட்ச் தீர்வுகள் மற்றும் சேவைகளின் விற்பனையினூடாக, விற்பனையாளர்கள் ஈட்டுகின்ற டிஜிட்டல் நாணயங்களின் அடிப்படையில் அவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படுகின்றன. விற்பனையாளர்கள் தாம் ஈட்டுகின்ற Kahawanu வெகுமதிகளை முதலாம் கட்டத்தின் கட்டத்தின் போது பல்வகைப்பட்ட பரிசுகளுக்கு பதிலாக உபயோகித்துக் கொள்ளவோ அல்லது எதிர்கால கட்டங்களுக்காக அவற்றை முதலீடு செய்யவோ வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்களுடைய முயற்சிகளுக்கு நெகிழ்திறன் மற்றும் நீண்ட கால அடிப்படையிலான மதிப்பு ஆகியன வழங்கப்படுகின்றன.
தமது சாதனைப் பெறுபேறுகளைக் கொண்டாடுவதற்காக பல நூற்றுக்கணக்கான விற்பனையாளர்கள் இந்நிகழ்வில் ஒன்றுதிரண்டுள்ளனர். உச்ச பெறுபேறுகளை வெளிப்படுத்திய ஒருவருக்கு ரூபா 1 மில்லியன் பணப்பரிசு வழங்கப்பட்டமை நிகழ்வின் முக்கிய அம்சமாக மாறியது. தாய்லாந்து நாட்டுக்கான சுற்றுலா, தங்க நாணயங்கள், இலத்திரனியல் சாதனங்களுக்கான வவுச்சர்கள், ஷொப்பிங் வவுச்சர்கள், ரீலோட்கள் உள்ளிட்ட உயர் மதிப்புக் கொண்ட பல்வேறு வெகுமதிகள் வழங்கப்பட்டன. Kahawanu Udanaya நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இது வரை, 3,000 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுக்கு வெகுமதிகள் அளிக்கப்பட்டுள்ளதுடன், நாடெங்கிலுமுள்ள தனது விற்பனை பங்குதாரரை பாராட்டி, மேம்படுத்துவதில் ஹட்ச் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கின்றது.
ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் விற்பனைத்துறை பொது முகாமையாளர் தரிந்து விஜேரத்ன அவர்கள் இந்நிகழ்ச்சித்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “Kahawanu Udanaya என்பது வெறுமனே ஒரு வெகுமதித் திட்டம் மாத்திரமல்ல, மாறாக இது எமது விற்பனையாளர்கள் மீதான அர்ப்பணிப்பாக அமைந்துள்ளதுடன், அவர்கள் தமது அபிலாஷைகள் மற்றும் இலட்சியங்களை அடையப்பெறுவதற்கான பயணத்திற்கான ஒரு முதலீடாகும். எமது விற்பனையாளர்கள் சமூகத்துடன் நாம் கட்டியெழுப்பியுள்ள வலுவான கூட்டாண்மையாக கட்டம் 1 பிரதிபலிப்பதுடன், இது போன்ற அர்த்தமுள்ள வழியில் அவர்களுடைய பங்களிப்புக்களுக்கு அங்கீகாரம் வழங்குவதை முன்னெடுத்துள்ளதையிட்டு பெருமை கொள்கின்றோம். ஒன்றாக வளர்வோம், ஒன்றாக எழுவோம் என்ற ஹட்ச் தாரக மந்திரத்திற்கு அமைவாக, வெற்றி என்பது பகிரப்பட வேண்டிய ஒன்று என்ற எமது நம்பிக்கையை இம்முயற்சி மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது,” என்று குறிப்பிட்டார்.
முதலாம் கட்டத்தின் வெற்றியானது அடுத்து வரும் கட்டங்களை இதை விடவும் மிகச் சிறப்பாக ஈடுபாடுகளைப் பேணும் வழியில் முன்னெடுப்பதற்கான வலுவான அத்திவாரத்தை இட்டுள்ளது. Kahawanu Udanaya கட்டம் 2 ஆனது வெகுமதிகளின் அனுபவத்தை புதிய உச்சங்களுக்கு இட்டுச் செல்ல தயாராகவுள்ளது. ரூபா 1 மில்லியன் என்ற மாபெரும் பணப்பரிசுடன் இணைந்து, யுனைட்டட் மோட்டர்ஸ் குழுமத்தின் ஒத்துழைப்புடன் ரூபா 5 மில்லியன் பெறுமதியான பண வவுச்சர்களையும் ஹட்ச் அறிமுகப்படுத்துவதுடன், வாகனமொன்றைக் கொள்வனவு செய்யும் சமயத்தில் இதனை உபயோகித்துக் கொள்ள முடியும். உச்சப் பெறுபேறுகளை வெளிப்படுத்துகின்றவர்களுக்கு ஒப்பற்ற வெகுமதிகள் இவ்வாறு வழங்கப்படுகின்றன. பரிசுகளுக்கு எல்லைகள் கிடையாது. இது வெல்வதற்கான பந்தயமும் கிடையாது. சிறப்பாகச் செயற்படும் அனைத்து விற்பனையாளர்களும் தாம் ஈட்டுகின்ற டிஜிட்டல் நாணயங்களின் அடிப்படையில் ஆடம்பரமான பரிசுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இது குறித்து விற்பனையாளர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்புக் கிட்டியுள்ளதுடன், இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தனது விற்பனையாளர்களுக்கு வெகுமதியளித்து, மேம்படுத்துவது குறித்த ஹட்ச் நிறுவனத்தின் முயற்சி, மிகவும் ஊக்கம் கொண்ட மற்றும் விசுவாசம் மிக்க வலையமைப்பைத் தோற்றுவிக்க உதவுவது மாத்திரமன்றி, நிதியியல் வெகுமதிகள், பிரயாண அனுபவங்கள், அல்லது வாழ்க்கைமுறையில் மேம்பாடுகள் போன்ற வழிகளில் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அர்த்தமுள்ள நற்பயன்களை வழங்குகின்றது. இந்த விரிவான அணுகுமுறை, எமது விற்பனைக் கூட்டாளர்கள் மற்றும் ஹட்ச் வர்த்தகநாமம் ஆகியவற்றின் தற்போதைய வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு நேரடியாக பங்களிக்கின்றது.