சினிமா
பிரபல கேரள நடிகை குற்றச்சாட்டு

Apr 16, 2025 - 12:32 PM -

0

பிரபல கேரள நடிகை குற்றச்சாட்டு

இந்தியாவின் கேரள மாநிலம் பொன்னானி பகுதியை சேர்ந்த மலையாள திரைப்பட நடிகை வின்சி அலோசியஸ். 'விக்ருதி' என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக கடந்த 2019 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார்.

 

மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடத்திருக்கிறார். "ரேகா" என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

 

இந்தநிலையில் போதைப் பொருள் பன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று நடிகை வின்சி அலோசியஸ் சமீபத்தில் கூறியிருந்தார். எதற்காக அவ்வாறு கூறினார்? என்று அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

 

போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சமீபத்தில் நான் கூறியிருந்தேன். இதற்கு சிலர் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே எதற்காக அவ்வாறு கூறினேன்? என்று விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

 

சமீபத்தல் ஒரு மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்தி ருந்தேன். அந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடித்த முன்னணி நடிகர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை நேரடியாக பார்த்தேன். அந்த நடிகர் போதையில் என்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறினார்.

 

இதனால் அந்த படத்தில் இருந்து விலக நான் தீர்மானித்தேன். ஆனால் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் என்னிடம் மன்னிப்பு கேட்டதாலும், நான் நடிக்காவிட்டால் அந்த படம் வெளியாகாது என்பதாலும் வேறு வழியின்றி நடித்துக் கொடுத்தேன்.

 

தனிப்பட்ட முறையில் அவர் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் படப்பிடிப்பு தளத்திலும், பொது இடத்திலும் போதைப்போருள் பயன்படுத்தி மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் தான் போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறினேன் என தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05