Apr 16, 2025 - 01:51 PM -
0
யாழ்ப்பாணத்திற்கு நாளை (17) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிட்டு பூங்காவிற்கு வருகையை தரவுள்ளதோடு தேர்தல் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்துவதற்கும் வருகிறார் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.
இன்று (16) சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எம்மைப் பற்றி பலர் விமர்சனங்களை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை கூறி வருகின்றனர். யாழில் பெரும்பான்மையான இடங்களில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை வழங்கி வருகிறார்கள்.
இதன் காரணமாகவே ஏனைய கட்சிகள் கலக்கம் அடைந்து இருக்கிறார்கள், பயத்தில் இருக்கிறார்கள் ஆகவே எங்கள் மீது விமர்சனங்ளை வைத்து வருகிறார்கள் என தெரிவித்தார்.
--