கிழக்கு
ஐஸ் போதை பொருள் வியாபாரி ஒருவர் கைது!

Apr 16, 2025 - 03:27 PM -

0

ஐஸ் போதை பொருள் வியாபாரி ஒருவர் கைது!

அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் 810 கிராம் ஐஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை நேற்று (15) இரவு கைது செய்துள்ளதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

அம்பாறை விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த போதை பொருள் வியாபாரியின் வீட்டை சம்பவதினமான நேற்று இருவரை 11.00 மணியளவில் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

 

இதன் போது வியாபாரத்துக்காக கொண்டுவந்த 810 கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டதுடன் 32 வயதுடைய வியாபாரியை கைது செய்தனர்.

 

இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05