Apr 17, 2025 - 11:09 AM -
0
ஐ.பி.எல். 2025 தொடரின் 32 ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து, 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை அறிவிக்கப்பட்டு விளையாடினார்கள்.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக 20 ஆவது ஓவரை வீசிய சந்தீப் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவரை வீசினார். அந்த ஓவரில் 4 வைடுகள், ஒரு நோ பால் என மொத்தமாக 11 பந்துகள் வீசினார்.
இதற்கு முன்னதாக ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் ஒரே ஓவரில் 11 பந்துகள் வீசியுள்ளனர்.