Apr 17, 2025 - 11:27 AM -
0
வடிவேலு இல்லாத வெற்றிடத்தை சந்தானம் நிரப்பி வந்தார். அவருடைய காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று இறங்கிவிட்டார்.
அவ்வாறு சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களும் நல்ல வரவேற்பை பெற தொடங்கியது. இப்போதும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் காமெடியனாக ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 49 ஆவது படத்தில் காமெடியனாக சந்தானம் நடிக்க உள்ளார். சிம்புவும், சந்தானமும் நீண்ட கால நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இவர்களின் காமெடி பல படங்களில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
அந்த வகையில் சிம்புவுக்காக காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டு உள்ளார். ஆனால் இந்த படத்தில் நடிக்க 13 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார். தயாரிப்பாளரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
அதோடு மட்டுமல்லாமல் 7 கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையை சந்தானத்திடம் கொடுத்து விட்டார். டிடி ரிட்டன்ஸ் படத்தின் கதாநாயகனாக நடித்த நிலையில் அதற்கு 5 கோடி தான் சம்பளம் பெற்றிருந்தார்.
ஆனால் இப்போது காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவே 13 கோடி சம்பளம் வாங்க உள்ளார். இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நிறைய படங்களில் சந்தானத்திற்கு காமெடி வாய்ப்புகள் வர இருக்கிறது. ஆனால் சந்தானம் அதை ஏற்றுக் கொள்கிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.