Apr 17, 2025 - 03:41 PM -
0
இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவையில் புதிய தர ஒப்பீட்டு நியமத்தை ஏற்படுத்தவுள்ள அதிநவீன மொபைல் வங்கிச்சேவைச் செயலியான DFCC ONE ஐ DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. சௌகரியம், பாதுகாப்பு மற்றும் இலகுவான அணுகல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள DFCC ONE ஆனது, டிஜிட்டல் வங்கிச்சேவையின் புத்தாக்கத்தில் பாரியதொரு முன்னேற்றத்தைக் குறித்து நிற்பதுடன், இலங்கையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மற்றும் இலகுவில் வங்கிச்சேவைகளை முன்னெடுக்க இடமளிக்கின்ற நிறுவனமாகத் திகழ வேண்டும் என்ற வங்கியின் குறிக்கோளை அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றது.
கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கான தளம் என்பதற்கும் அப்பால், நிஜ உலகின் வங்கிச்சேவை தேவைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் வாழ்க்கைமுறைக் கூறுகளை இடைவிடாது ஒருங்கிணைத்து, அறிவுபூர்வமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவுகின்ற நிதி அறிவு சார்ந்த கருவிகளை வழங்கி வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் வகையில் DFCC ONE கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத் திட்டத்துடன் ஒன்றியுள்ள இச்செயலி, நிதியியல் ரீதியாக அனைவரையும் உள்ளடக்கி, டிஜிட்டல் நடைமுறைகளை கைக்கொள்வதை ஊக்குவித்து, தேசிய நோக்கங்களுக்கு ஆதரவளிக்கின்றது. இடைவிடாத, உணர்வை ஈர்க்கின்ற மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவத்தை வழங்கி, டிஜிட்டல் மகத்துவத்தை அடையப்பெறும் தனது அர்ப்பணிப்பை DFCC வங்கி மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. DFCC வங்கியின் கடனட்டைகளைப் பயன்படுத்தி பயன்பாட்டுக் கட்டணங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் மேம்படுத்தப்பட்டுள்ளமை DFCC ONE ன் முக்கியமான மேம்படுத்தல்களில் ஒன்றாக அமைந்துள்ளதுடன், நிதிக் கடப்பாடுகளை நிர்வகிப்பதற்கு மகத்தான நெகிழ்திறனை வழங்குகின்றது.
பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் அதிமுக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதுடன், உடல் அங்கவியல் அங்கீகார நடைமுறை (biometric authentication) மற்றும் OTP அடிப்படையிலான சரிபார்ப்பு நடைமுறை ஆகியன இலகுவான அணுகலைப் பேணும் அதேசமயம், பயன்பாட்டாளர் கணக்குகளைப் பாதுகாத்து, மன நிம்மதியை உறுதி செய்கின்றது.
DFCC வங்கியின் பிரதம டிஜிட்டல் அதிகாரி ஒமர் சாஹிப் அவர்கள் இந்த அறிமுகத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் வங்கிச்சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக, அன்றாட வாழ்வின் அத்தியாவசிய அங்கமாக மாற்றம் கண்டுள்ள ஒரு காலகட்டத்தில் DFCC ONE அறிமுகமாகியுள்ளது. இத்தளம் ஏற்கனவே வலுவான ஒன்றாகக் காணப்படுகின்ற போதிலும், இலட்சியப் பற்று மிக்க பல்வேறு புத்தாக்கங்களை நாம் திட்டமிட்டுள்ளதுடன், அவை அனைத்தும் துரிதமாக செயல் வடிவம் பெறும். இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவை செயலிகளின் தங்கத் தரத்தை நிலைநாட்டுவதே எமது நோக்கமாக உள்ளதுடன், மிகவும் இலகுவான, மற்றும் மிகவும் நற்பலனளிக்கின்ற வங்கியாக DFCC வங்கியைத் திகழச் செய்வோம்,” என்று குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்களின் ஆழ்ந்த கருத்துக்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள DFCC ONE வங்கிச்சேவையில் உச்சபட்ச சௌகரியம் மற்றும் கட்டுப்பாட்டை வழங்கும். முக்கியமான நிதி விபரங்கள் தேவைப்படும் சமயங்களில் கணக்கினுள் நுழைய வேண்டிய தேவையின்றி, உடனடியாக அணுகி, தமது கணக்கு மீதியை விரைவாக சரிபார்ப்பதற்கு பயன்பாட்டாளர்களுக்கு இடமளிக்கின்ற Peek Balance போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. எவ்விதமான சிரமங்களுமின்றி விரல் அடையாளம் அல்லது முக அடையாளத்தை உபயோகித்து கணக்கினுள் நுழைவதற்கு இடமளிக்கும் Biometric Authentication பாதுகாப்பையும் மேம்படுத்துகின்றது. பௌதிக ஆவணங்களின் தேவையைப் போக்கி, மேற்கொண்டுள்ள கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை நிகழ்நேரத்தில், டிஜிட்டல் முறையில் பார்ப்பதற்கு ePassbook இடமளிக்கின்றது.
தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட பாதுகாப்பு மட்டத்தை உறுதி செய்தவாறு, வாடிக்கையாளர்கள் தமது பாதுகாப்பு ஏற்பாடுகளை தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதற்கு OTP Preferences இடமளிக்கின்றது. கையிலுள்ள பணப்புழக்கம் காரணமாக எழுகின்ற முட்டுக்கட்டைகளை இலகுபடுத்தி, தாம் கொண்டுள்ள கடன் வசதியின் மூலமாக இலகுவாகவும், நேரடியாகவும் பயன்பாட்டுக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு Bill Payments via Credit Card வசதி இடமளிக்கின்றது. பாதுகாப்பை மேம்படுத்தி, தமது நிதிநிலவரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு தாம் விரும்புகின்ற பணக் கொடுப்பனவுத் தொகையின் உச்ச வரம்பை தாமே நிர்ணயிப்பதற்கு Transfer Limit Customisation பயன்பாட்டாளர்களுக்கு இடமளிக்கின்றது.
Google Play Store, Apple App Store, அல்லது Huawei AppGallery ஆகியவற்றின் மூலமாக மொபைல் செயலியில் தாமாகவே DFCC ONE ஐ பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்த ஆரம்பிக்க முடியும். திரையில் தோன்றும் மிகவும் எளிமையான அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தமது DFCC டெபிட் அட்டை, DFCC கடனட்டை, அல்லது DFCC வங்கி கணக்கு இலக்கத்தை உபயோகித்து வாடிக்கையாளர்கள் இதற்காக தம்மைப் பதிவு செய்து கொள்ள முடியும். புதிய தளத்திற்கு சிரமங்கள் எதுவுமின்றி இடைவிடாது மாறிக் கொள்வதை, மிகவும் பாதுகாப்பான OTP அடிப்படையில் அங்கீகரிக்கும் செயல்முறை உறுதி செய்கின்றது.
வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் அனுபவங்களை தொடர்ந்தும் மேம்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன், நிதி நிர்வாகத்தை இலகுவானதாக, திறன்மிக்கதாக மற்றும் மிகவும் பலனளிக்கும் ஒன்றாக மாற்றுகின்ற ஒரு முழுமையான டிஜிட்டல் வங்கித் துணையாக DFCC ONE ஐ மேம்படுத்துவதில் DFCC வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. ஒரு சிறு தொடுகையுடன் எவ்விதமான சிரமங்களுமின்றி வங்கிச்சேவையை மேற்கொள்ளச் செய்வதில் DFCC வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த சமீபத்தைய புத்தாக்கம் மீளவும் உறுதிப்படுத்துகின்றது.

