செய்திகள்
தபால் மூல வாக்களிப்பு திகதிகளில் திருத்தம்

Apr 17, 2025 - 03:44 PM -

0

தபால் மூல வாக்களிப்பு திகதிகளில் திருத்தம்

2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதற்கான திகதிகள் ஏப்ரல் மாதம் 24, 25, 28 மற்றும் 29 என திருத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

"அதன்படி அனைத்து அரச நிறுவனங்கள், பொலிஸார், முப்படையினர், பாடசாலைகள், கூட்டுத்தாபனங்கள், அரசியலமைப்பு சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்காக ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய 4 தினங்கள் தபால் மூல வாக்குகளை அளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. 

"எந்த மாற்றங்களும் இல்லாமல், அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் பிற அனைத்து நிறுவனங்களிலும் உள்ள தபால் மூல வாக்காளர்கள் இந்த 4 நாட்களில் தங்கள் அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது." 

"மேலும், கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்காக விசேட பணிகளில் ஈடுபடும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் கண்டி பெண்கள் உயர்நிலைப் பாடசாலையில் ஒரு விசேட தபால் மூல வாக்களிப்பு நிலையம் நிறுவப்படும்." 

அதேபோன்று முப்படையினருக்காக அந்தந்த இராணுவ முகாம்களில் நியமிக்கப்பட்ட சான்றளிக்கும் அதிகாரி முன்னிலையில் இந்த 4 நாட்களுக்குள் தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன." என்றார். 

தேர்தல்கள் நடைபெற உள்ள 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டிய அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்று (16) சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 

அதன்படி, அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன. 

அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் ஏப்ரல் 29 வரை தொடரவுள்ளது. 

ஏப்ரல் மாதம் 29 திகதிக்கு பிறகு எவரேனுக்கும் அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் அது குறித்து விசாரிக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05