Apr 17, 2025 - 03:45 PM -
0
Global Franchise Forum (GFF) இலங்கை அமர்வு எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி கொழும்பு, Sheraton ஹோட்டலில் முன்னெடுக்கப்படவுள்ளது. உலகின் முன்னணி வர்த்தக நாமங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் அமையவுள்ள இந்த நிகழ்வு, இலங்கையின் சந்தையில் காணப்படும் விஸ்தரிப்பு வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.
இந்த அமர்வு, இந்திய-இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை தேசிய தொழிற்துறை சம்மேளனம் (CNCI), சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICC) இலங்கை, கொழும்பு வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனங்களின் கூட்டமைப்பு (FCCISL) உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. அவர்களின் ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் சர்வதேச உரிமையாளர் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதில் நிகழ்வின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தெற்காசியாவில் இலங்கை ஒரு மூலோபாய நுழைவாயிலாக அமைந்து, வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், சர்வதேச வர்த்தக நாமங்களுக்கு அதிகரித்து வரும் தேவையுடன் விரிவடையும் நுகர்வோர் சந்தை மற்றும் முதலீட்டாளர் நட்பு கொள்கைகளை வழங்குகிறது. விருந்தோம்பல், சில்லறை விற்பனை, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற நாட்டின் செழிப்பான துறைகள், புதிய வாய்ப்புகளைத் தேடும் உலகளாவிய உரிமையாளர்களுக்கு வளமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
இலங்கையில் விரிவடையத் தயாராக உள்ள உலகளாவிய வர்த்தக நாமங்களைக் கொண்ட பிரத்தியேக franchise கண்காட்சி, வர்த்தக நாம உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேரடி வணிக சந்திப்புகள் மற்றும் franchise நிபுணர்களால் வழிநடத்தப்படும் நுண்ணறிவுமிக்க தொழில்துறை விவாதங்களை பங்கேற்பாளர்கள் எதிர்நோக்கலாம். இந்த நிகழ்வு சிறந்த முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களுடன் இணையற்ற தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும், உரிமையாளர் விரிவாக்க உத்திகளை மையமாகக் கொண்ட கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளையும் உள்ளடக்கியிருக்கும். franchise துறையில் சிறந்து விளங்குவதை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் விசேட விருதுகள் வழங்கும் இரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Franchise India Group இன் தவிசாளர் கௌரவ் மார்யா கருத்துத் தெரிவிக்கையில், ”இலங்கையில் Global Franchise Forum 2025 என்பது, கண்டிப்பாக பங்குபற்ற வேண்டிய நிகழ்வாக அமைந்திருக்கும். குறிப்பாக, தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், பிரதான franchisees, விரிவாக்கத்தை எதிர்பார்க்கும் வியாபார உரிமையாளர்கள், தொழிற்துறை நிபுணர்கள், மற்றும் கூட்டாண்மை தீர்மானமெடுப்போருக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கும். உள்நாட்டு பங்காளர்களுடன் சர்வதேச வர்த்தக நாமங்களை இணைப்பதற்கான முக்கியமான கட்டமைப்பாக இது அமைந்திருக்கும். உயர் வளர்ச்சி வாய்ப்புகள் காணப்படும் பிராந்தியங்களில் ஒப்பற்ற இணைப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கும்.” என்றார்.
மர்யா தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “இலங்கையின் பொருளாதாரம் உறுதியான மீட்சியை வெளிப்படுத்திய வண்ணமுள்ளது. குறிப்பாக மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டுக்கான மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதமாக 3.3% ஐ அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த நேரடி வெளிநாட்டு முதலீடுகள் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமானதாக பதிவாகியுள்ளது. அதனூடாக முதலீட்டாளர் நம்பிக்கையில் உயர்வான நிலை வெளிப்பட்டுள்ளது. பிரதான துறை தொடர்ந்தும் விரிவாக்கமடைவதுடன், வளர்ச்சியடைந்து வரும் மத்திய தர பிரிவினர் மற்றும் நகரமயமாக்கல் வளர்ச்சி போன்றன இதில் பங்களிப்புச் செய்கின்றன.” என்றார்.
இலங்கையின் தொழில்முயற்சியாளர்களுடன் சர்வதேச franchisors களை இணைப்பை ஏற்படுத்துவதனூடாக, நிலைபேறான, நீண்ட கால பங்காண்மைகளை ஏற்படுத்தி, தொழில் வாய்ப்புகள் உருவாக்கம், அறிவு பகிர்வு மற்றும் வியாபார புத்தாக்கம் தூண்டல் ஆகியவற்றை மேற்கொள்ள எதிர்பார்க்கிறது. The Global Franchise Forum இன் franchise விருத்தியை முன்னேற்றுவது என்பதற்கான அர்ப்பணிப்பு, இலங்கையின் பரந்த தேசிய நோக்கான, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவர்தல் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் போட்டிகரமான மற்றும் சிறந்த வியாபார மையமாக நாட்டைத் திகழச் செய்தல் போன்றவற்றுக்கமைவானதாக உள்ளது.

