Apr 17, 2025 - 05:02 PM -
0
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகும் திரைப்படம் தான் ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படம் தான் விஜய்யின் கடைசி திரைப்படமாகும். அரசியலில் முழுமையாக தன்னை அர்ப்பணிக்க முடிவெடுத்த விஜய் நடிப்பில் இருந்து விலகவுள்ளார்.
இந்த முடிவை மாற்றும்படியும், தொடர்ந்து படங்களில் நடிக்குமாறும் ரசிகர்களும் திரைபிரபலங்களும் விஜய்க்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் விஜய் தன் முடிவில் உறுதியாக இருக்கின்றார் என்றே தெரிகின்றது. 200 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்கி வரும் விஜய் இந்த முடிவை எடுத்து பலருக்கும் அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த மக்களுக்கு கைமாறு செய்யவே விஜய் அரசியலில் நுழைவதாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியல்வாதியாக உருவெடுக்கவுள்ளார் தளபதி. எனவே அவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகும் புது திரைப்படம் ஜனநாயகன் தான். இருந்தாலும் அவரின் நடிப்பில் ஏற்கனவே ரிலீசான பல படங்கள் தொடர்ந்து ரீரிலீசாக அதிக வாய்ப்புகள் உள்ளது. கடந்தாண்டு விஜய்யின் கில்லி திரைப்படம் ரீரிலீசாகி வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது சச்சின் திரைப்படம் ரீரிலீசாக இருக்கின்றது. ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சச்சின். மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களாலும் விரும்பக்கூடிய ஒரு படமாக உள்ளது சச்சின்.
அப்படிப்பட்ட படம் தற்போது ரீரிலீசாக இருக்கின்றது. 2005 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இந்த ஆண்டுடன் 20 வருடங்களை நிறைவு செய்கின்றது. அதனை கொண்டாடும் வகையில் இப்படம் மிகப்பிரம்மாண்டமான முறையில் பல திரையரங்கங்களில் ரீரிலீசாக இருக்கின்றது. ஒரு புது படம் எப்படி ரிலீஸாகுமா அது போல சச்சின் திரைப்படத்தை ப்ரொமோட் செய்து வெளியிடுகிறார் தயாரிப்பாளர் தாணு.
இந்நிலையில் சச்சின் ரீரிலீசுக்கு வரவேற்பு எப்படி உள்ளது ? புக்கிங் நிலை என்ன ? வசூலில் சாதிக்குமா ? என்பது போன்ற பல கேள்விகள் விஜய் ரசிகர்கள் மனதில் உள்ளது. அதற்கான விடைகள் தற்போது மெல்ல மெல்ல கிடைத்து வருகின்றது.
சச்சின் திரைப்படம் ரீரிலீசாகும் திரைகளில் புக்கிங் துவங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்ததாம். இதனால் காட்சிகளை அதிகப்படுத்த திரையரங்க உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.