வடக்கு
தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி யாழ் விஜயம்

Apr 17, 2025 - 08:38 PM -

0

தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி யாழ் விஜயம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரத்திற்காக இன்றைய தினம்(17) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நல்லூர் சங்கிலியன் தோப்பில் (கிட்டு பூங்கா) இன்று மதியம் 2.00 மணியளவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்றார். 

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டனர். 

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வருகையை முன்னிட்டு சங்கிலியன் தோப்பில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தீவிர சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05