Apr 18, 2025 - 07:03 AM -
0
இன்று பெரிய வெள்ளியாகும். இது கிறிஸ்தவ அடியார்களின் நாளேட்டில் முக்கியமானதொரு தினமாகும்.
மனிதர்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காக இறைவனின் திருக்குமரர் மனித குலத்தின் மீட்பராக பூலோகம் வருகை தந்து, சிலுவையில் அறைந்து மனித குல இரட்சண்யத்திற்காக செய்த தியாகத்தை கிறிஸ்தவ அடியார்கள் நினைவுகூருவார்கள்.
இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள், இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ அடியார்கள் இன்று விசேட ஆராதனைகளில் கலந்துகொண்டு இயேசுவின் சிலுவை திருப்பாடுகளை நினைவுகூருவார்கள்.
அவர்கள் விரதமிருந்து வெள்ளை நிற ஆடை அணிந்து தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் ஈடுபடுவார்கள். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுந்த விதம் நினைவுகூரப்படும்.