Apr 18, 2025 - 11:30 AM -
0
கொமர்ஷல் வங்கியானது லங்காபே தொழில்நுட்ப புத்தாக்க விருதுகள் 2025 இல் ஐந்து தங்க விருதுகளை வென்றுள்ளதுடன் இந்த விருதுகள் இலங்கையில் கட்டண தொழில்நுட்ப புத்தாக்கங்களில் வங்கியின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இந்த கௌரவமிக்க விருது வழங்கும் நிகழ்வில் கொமர்ஷல் வங்கி, டிஜிட்டல் கொடுப்பனவுகளில் (வங்கியியல் நிறுவனங்கள்) சிறந்து விளங்குவதற்கான ஒட்டுமொத்த விருது மற்றும் ஷஆண்டின் பொதுவான சிறந்த ஏடிஎம் செயல்படுத்துநர் மற்றும், ஆண்டின் மிகவும் புத்தாக்கமான வங்கி, ஷஆண்டின் சிறந்த லங்காபே அட்டை செயல்படுத்துநர் மற்றும் ஆண்டின் சிறந்த லங்காபே அட்டை கொள்வனவாளர் ஆகியவற்றுக்கான தங்க விருதுகளை வென்றது.
இவற்றுக்கு மேலதிகமாக வங்கியானது சில்லறை கொடுப்பனவுகளுக்கான சிறந்த வங்கிக்காக வெள்ளி விருதையும், ஆண்டின் சிறந்த LankaQR செயல்படுத்துநருக்காக வெண்கல விருதையும் வென்றதன் மூலம் அதன் விருதுகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது.
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் சிறந்து விளங்குவதற்கான ஒட்டுமொத்த விருது (வங்கியியல் நிறுவனங்கள்) என்பது டிஜிட்டல் கட்டணச் செயலாக்கத்தில் மிகவும் திறமையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட நிதியியல் நிறுவனத்திற்கு LankaPay ஆல் வழங்கப்படும் மிக உயர்ந்த அங்கீகாரமாகும். இந்த மதிப்புமிக்க விருது, இலங்கையின் நிதித் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதற்கான வங்கியின் விதிவிலக்கான செயல்திறன், புத்தாக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கான சான்றாகும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி வென்ற இந்த விருதுகள் தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு.சனத் மனதுங்க, கருத்து தெரிவிக்கையில் நாட்டின் தேசிய கட்டண வலையமைப்பை மேம்படுத்தும் இலங்கை மத்திய வங்கியின் நோக்கத்திற்கு ஏற்ப, டிஜிட்டல் கட்டண தீர்வுகளை முன்னெடுப்பதற்கும், வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதற்கும், நிதியியல் உள்ளடக்கம் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்குமான வங்கியின் அர்ப்பணிப்புக்கு இந்த விருதுகள் பொருத்தமான அங்கீகாரமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்காக நாம் பல புரட்சிகரமான புத்தாக்கங்களை உருவாக்கி அபிவிருத்தி செய்துள்ளோம் என்று கூறினார்.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 10% கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.

