வணிகம்
LankaPay Technnovation விருதுகள் 2025இல் செலான் வங்கி பல விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டது

Apr 18, 2025 - 11:34 AM -

0

LankaPay Technnovation விருதுகள் 2025இல் செலான் வங்கி பல விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டது

செலான் வங்கி சமீபத்தில் LankaPay Technnovation விருதுகள் 2025இன் 7ஆவது பதிப்பில் மூன்று மதிப்புமிக்க விருதுகளை வென்றது. இதில் ‘Acquiring Bank for the Best Mobile Application for Retail Payments via JustPay’ விருதும் அடங்கும். இந்த விருது Bhasha Lanka (Pvt) Ltdஇன் Helapayஇற்கு வழங்கப்பட்டது. 2025 மார்ச் 26ஆம் திகதி, கொழும்பு ஷங்ரிலா Grand Ballroomஇல் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வு, வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதற்காக நிதி தொழில்நுட்ப முன்னேற்றங்களில் செலான் வங்கியின் தனித்தன்மையான முயற்சிகளுக்கான அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. 

செலான் வங்கி, B பிரிவில் ஆண்டின் Best Common ATM Enable விருதின் தங்கப் பதக்கத்தை பெருமையுடன் பெற்றுள்ளது. அதே பிரிவில் ‘வாடிக்கையாளர் சௌகரியத்தில் சிறந்து விளங்குதல்’ (Merit) மற்றும் ‘நிதி உள்ளடக்கத்திற்கான ஆண்டின் நிதி நிறுவனம்’ (Merit) ஆகியவற்றிலும் விருதுகளை வென்றனர். டிஜிட்டல் வங்கியியலில் புதுமைகளை ஊக்குவிக்கும் முயற்சிகளைக் கொண்ட ஒரு நிறுவனமாக அன்புடன் அரவணைக்கும் வங்கியை இவ் விருதுகள் மேலும் வலியுறுத்துகிறது. 

Bhasha Lanka (PVT) Ltd. நிறுவனத்திற்கு API வங்கி சேவைகளை வழங்குவதன் மூலம், Fintech/Start-upஐ ஆதரிப்பதில் வங்கிகளின் கூட்டு அணுகுமுறை மேலும் பிரதிபலித்தது. Helapayஇற்கு வழங்கப்பட்ட சேவைகள், The Acquiring Bank for JustPay digital paymentஆக வங்கி அங்கீகரிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. அதிகரித்து வரும் டிஜிட்டல் உலகில் வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய பொருத்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அணுகக்கூடிய மற்றும் பாதுகாப்பான நிதி சேவைகளை மேம்படுத்துவதற்கான செலான் வங்கியின் முயற்சிகளையும் இந்த விருதுகள் நிரூபிக்கின்றன. இலங்கைக்கு டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுப்பதில் வங்கியின் உறுதிப்பாட்டை இது மேலும் வலுப்படுத்துவதுடன் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க ஆர்வமாய் உள்ள அரசாங்கத்தின் பாதையை ஆதரிக்கிறது. 

இலங்கையின் தேசிய கட்டண வலையமைப்பான LankaPay ஆல் 2017 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட LankaPay Technnovation விருதுகள், தொழில்துறையை வடிவமைக்கும் டிஜிட்டல் கட்டண தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் முயற்சிகளைக் கொண்டாடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் ஒரே நிதித்துறைசார் விருது வழங்கும் விழாவாகும். வாடிக்கையாளர் சேவை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களை இந்த விருதுகள் அங்கீகரித்து சிறப்பிக்கின்றன. இதன் மூலம் நாடு, டிஜிட்டல் ரீதியாக உள்வாங்கிய பொருளாதாரமாக மாறுவதற்கு திறம்பட உதவுகின்றன. 

இந்த வெற்றிகள் குறித்து டிஜிட்டல் வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் சமிந்த செனவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “செலான் வங்கியில், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான எங்கள் கூட்டு முயற்சிகளை இந்த மதிப்புமிக்க விருதுகள் உறுதிப்படுத்துவதால் இந்த விருதுகளைப் பெறுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். எங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதே எங்கள் முயற்சிகளின் நோக்கமாகும் என்பதை இவ் விருதுகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. எமது சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட நாங்கள், சிறந்த, உள்வாங்கிய மற்றும் புதுமையான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கான எங்கள் முயற்சிகளைத் தொடர உறுதி பூண்டுள்ளோம். என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05