Apr 18, 2025 - 12:17 PM -
0
SLIM People’s Choice விருதுகள் 2025இல், “வருடத்தின் சிறந்த சேவை வர்த்தக நாமம்” (Service Brand of the Year) மற்றும் “இளையோர்களின் தெரிவான சேவை வர்த்தக நாமம்“ (Youth Choice Service Brand of the Year) ஆகிய இரண்டு பெரிய விருதுகளை பெற்றுக்கொண்டதன் ஊடாக, நாட்டின் மிகவும் நம்பகமான இணையவழியிலான பொருட்கொள்வனவிற்கான இடமாக, Daraz Sri Lanka தனது நிலையை பலப்படுத்திக் கொண்டுள்ளது.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் (SLIM) நடத்தப்படும் SLIM People’s Choice விருதுகள், நுகர்வோர் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய அங்கீகாரங்களில் ஒன்றாகும். முற்றிலும் மக்களின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் தெரிவுசெய்யப்படுவதால், இந்த விருதுகள் அர்த்தமுள்ளதாக அமைகின்றன. இலங்கையிலுள்ள கொள்வனவாளர்களின் உண்மையான கருத்துக்களை பிரதிபலிப்பதாக இது அமைகின்றது. Daraz Sri Lankaவின் இந்த இரட்டிப்பு வெற்றியானது, அனைத்து வயதினரிடையேயும் வர்த்தக நாமத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு வலுவான சான்றாக அமைகின்றது. இது குறிப்பாக இளம் நுகர்வோர் மத்தியில் செல்வாக்கு செலுத்துவதாகவும் அமைகின்றது.
வாடிக்கையாளர் திருப்தியில் வலுவான கவனம் செலுத்தி, இலங்கையில் இணையவழி (online) சில்லறை விற்பனையில் Daraz தொடர்ந்து புதிய தரநிலைகளைப் பேணி வருகின்றது. இந்த இயங்குதளமானது வேகமான மற்றும் நம்பகமான விநியோகம், பல்வேறு முறைகளில் கட்டணம் செலுத்தக்கூடிய வசதி மற்றும் பரந்தளவிலான உற்பத்திகளை வழங்குகின்றது. இது சிறந்த வசதி மற்றும் அணுகல்தன்மையை வழங்குவதோடு, வாடிக்கையாளர்கள் அதிகம் சேமிக்கவும் மற்றும் பலனளிக்கும் கொள்முதல் அனுபவத்தை அனுபவிக்கவும் உதவுகின்றது.
இளைஞர்களுடனான Daraz Sri Lankaவின் ஈடுபாடானது, வெறும் விளம்பரங்களை விட அதிகமானது. டிஜிட்டல் கல்வியறிவு திட்டங்கள், விசேட சலுகைகள் மற்றும் ஊடாடும் பிரச்சாரங்கள் மூலம், Daraz Sri Lanka இளைஞர்களுடன் இணைந்து செயற்படுகின்றது. இதன் விளைவாக, இலங்கையின் இளைய தலைமுறையினரின் டிஜிட்டல் வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாக Daraz Sri Lanka மாறியுள்ளது. இதற்கு மேலதிகமாக, சிறு வர்த்தக முயற்சிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு தொடர்ந்து ஆதரவளித்து, டிஜிட்டல் பொருளாதாரத்தில் அவர்கள் மென்மேலும் வளர்ச்சியடைவதற்கு உதவுகின்றது.
Daraz Sri Lankaவின் பிரதம வர்த்தக அதிகாரியான ஒஷான் ரணதுங்க இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில் : “எமக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தினால் உண்மையாகவே நாம் பெருமையடைகின்றோம். Darazஇல், எமது வாடிக்கையாளர்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதில் நாம் அவதானம் செலுத்துகின்றோம். அவர்களின் தேவைகளை தொடர்ந்து கேட்டறிந்து உண்மையான பெறுமதியை வழங்குவதன் மூலம் இதனை நாம் செய்கின்றோம். இலங்கையர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை, இந்த விருதுகள் வெளிப்படுத்துகின்றன. இலங்கையில் டிஜிட்டல் சில்லறை வர்த்தக அனுபவத்தை சிறந்த முறையில் வழங்குவதற்கு நாம் முன்னரை விட அதிக அர்ப்பணிப்புடன் உள்ளோம்” என்றார்.
Daraz குழுமத்தை பற்றிய அறிமுகம்
2015ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Daraz, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் முன்னணியில் திகழும் இலத்திரனியல் வர்த்தகத் தளமாகும். 500 மில்லியன் மக்களுடன் துரிதமாக வளர்ந்து வரும் பிராந்தியத்தில் கவனம் செலுத்தி, அதிநவீன இணையவழி சந்தை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விற்பனையாளர்களையும் கொள்வனவாளர்களையும் இது ஆதரிக்கின்றது. இந்த நிறுவனமானது, இலத்திரனியல் வர்த்தகம், தளவாடங்கள், கொடுப்பனவுகளை செலுத்துதல் மற்றும் நிதிச் சேவைகளை உள்ளடக்கிய ஒரு இணைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதன் ஊடாக, அதிவேகமான, தனிப்பயனாக்கப்பட்ட கொள்வனவு அனுபவத்தை வழங்குவதையும், வர்த்தக சக்தியின் மூலம் தெற்காசிய சமூகங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

