Apr 18, 2025 - 04:17 PM -
0
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவை உடனடியாக நீக்கி, அரசியலமைப்புக்கு அமைய புதிய அதிகாரிகள் குழுவை நியமிக்குமாறு தேசிய விளையாட்டு சங்கங்களின் தலைவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒலிம்பிக் குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று (17) அதிவிசேட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, தேசிய விளையாட்டு சங்கங்களின் தலைவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவால் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் நிதி நிறுத்திவைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, நேற்று இந்த பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இந்த பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் ஆரம்பமானது.
சுமார் 27 உறுப்பு சங்கங்களின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டம், சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்றது.
இரவு 9 மணியளவில் ஒலிம்பிக் குழுவின் தலைவர் திடீரென கூட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

