செய்திகள்
சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ஓவியம் வரைய வாய்ப்பு

Apr 18, 2025 - 08:27 PM -

0

சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ஓவியம் வரைய வாய்ப்பு

சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்கும் குழந்தைகளுக்காக, புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு ஏற்பாடு செய்த ஓவியங்களை வரைய வாய்ப்பு இன்று (17) காலை ஆரம்பமானது.


புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார  அமைச்சர் வைத்தியர் ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க ஆகியோரின் பங்கேற்புடனும், அரச அதிகாரிகளின் பங்களிப்புடனும் நடைபெற்றது.


இந்த நிகழ்வு இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு தெரிவித்தது.


அதன்படி, ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணிக்கு கண்டி ரெஜின ஹோட்டல் முன்பாக ஆரம்பமாகும் இந்த நிகழ்வில், 450 குழந்தைகளுக்கு ஓவியம் வரையும் வசதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த நிகழ்வில் பங்கேற்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சான்றிதழ் வழங்குவதற்கு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05