செய்திகள்
பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

Apr 19, 2025 - 10:19 AM -

0

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.


இதனால், அந்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மாற்று வீதியாக எல்ல-வெல்லவாய வீதியைப் பயன்படுத்தலாம் என பதுளை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


இன்று (19) அதிகாலை இந்தச் சம்பவம் பதிவாகியதாகவும், மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.


தடைபட்டுள்ள வீதியில் உள்ள மண்ணை அகற்றுவதற்கு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05