விளையாட்டு
மோசமான சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்த ஆர்.சி.பி!

Apr 19, 2025 - 12:14 PM -

0

மோசமான சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்த ஆர்.சி.பி!

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. 

மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆர்.சி.பி. அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

ஐ.பி.எல். தொடரில் சொந்த மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை ஆர்.சி.பி படைத்துள்ளது. 

இதற்கு முன்னர் இந்தப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெல்லி அணி (45 தோல்வி, டெல்லி மைதானம்) இருந்தது. 

சொந்த மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள் பட்டியல்:- 

ஆர்.சி.பி - 46 தோல்விகள் (பெங்களூரு) 

டெல்லி கெப்பிடல்ஸ் - 45 தோல்விகள் (டெல்லி) 

கே.கே.ஆர் - 38 தோல்விகள் (கொல்கத்தா) 

மும்பை இந்தியன்ஸ் - 34 தோல்விகள் (மும்பை வான்கடே)

Comments
0

MOST READ
01
02
03
04
05