சினிமா
பிரியங்காவின் கணவர் வசி இலங்கை அரசியல் வாரிசா?

Apr 19, 2025 - 03:38 PM -

0

பிரியங்காவின் கணவர் வசி இலங்கை அரசியல் வாரிசா?

விஜய் டிவியில் பிரபலமான பிரியங்கா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீர் திருமணம் செய்து கொண்டார். 

தன்னுடைய திருமண புகைப்படங்களை பிரியங்கா வெளியிட்டதும் அவருடைய கணவர் வசி யார் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. 

இந்த நிலையில் பிரியங்காவின் கணவர் இலங்கையில் பிரபலமான அரசியல் குடும்பத்தை சார்ந்தவர் என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

சித்திரை மாதம் பிறந்ததும் பிரபலங்களின் திருமண பங்க்ஷன் களைகட்ட தொடங்கி இருக்கிறது. எதிர்பாராத நேரத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய திடீர் திருமண அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

அதிலும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிரியங்கா வெளியிட்ட திருமண புகைப்படங்கள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.முதல் திருமணம்பிரியங்காவிற்கு சில வருடங்களுக்கு முன்பே விஜய் டிவி பிரபலம் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவர்களுடைய திருமணம் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்து விட்டது. 

ஆனால் பிரியங்கா அது பற்றி அறிவிக்காமலே வைத்திருந்தார். அதனால் அவங்களுடைய இரண்டாவது திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதிலும் பிரியங்காவின் கணவர் யார் என்ற கேள்விகளும் இணையத்தில் அதிகமாக இருந்தது. 

பிரியங்கா திருமணத்தின் போது போடப்பட்ட சிகப்பு ஷால் இதற்கு தானா? அந்த நொடி அழுதுட்டாங்க! தோழி உருக்கம் கணவர் பற்றி சர்ச்சைபிரியங்காவின் கணவர் சீரியல் தயாரிப்பாளர் என்றும் அவர் டிஜேவாக இருக்கிறார் என்றும் பேசி வந்தனர். 

ஆனால் அவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாக இருக்கிறது. அதாவது பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழர் என்று ஏற்கனவே சிலர் பேசி இருந்தனர் அது போல பிரியங்காவின் கணவர் குடும்பம் திருகோணமலையில் தான் வசித்து வந்ததாக கூறப்பட்டது.

இலங்கை வாழ் தமிழர்களிடம் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்து இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்து மறைந்த இரா சம்பந்தனின் தங்கையின் மகன்தானாம் பிரியங்காவின் கணவர் வசி என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

அதுபோல வசி இலங்கையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறாராம். தமிழ்நாட்டில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தி வருவது வாடிக்கையாக இருக்கிறது. 

அதுபோன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரியங்கா போயிருந்த போதுதான் வசியுடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எது எப்படியோ பிரியங்காவின் இரண்டாவது திருமண வாழ்க்கை அவர் எதிர்பார்த்தபடி மகிழ்ச்சிகளை கொடுக்க வேண்டும் என்பது ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது. 

பிரியங்காவின் கனவுகள்ஒரு சிலர் பிரியங்காவை விமர்சித்து வந்தாலும் அதிகமானோர் பிரியங்கா மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அவருடைய குடும்பத்தினர் ஆசை கனவு இனியாவது நிறைவேற வேண்டும் என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05