Apr 19, 2025 - 04:49 PM -
0
தமிழகம் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் சிறுமி போல் இருந்ததால் அவரது வயதை வைத்தியர்கள் விசாரித்தனர்.
அப்போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வைத்தியர்கள், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து பேரூர் அனைத்து மகளிர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிஸார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுமி அங்குள்ள பாடசாலையில் 9ஆம் வகுப்பு படித்துள்ளார். அவரும், அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 22) என்பவரும் காதலித்துள்ளனர்.
கோபாலகிருஷ்ணன் மாணவியை திருமணம் செய்து முடிவு செய்துள்ளார். இதையடுத்து 2 பேரின் பெற்றோர் சம்மதத்துடன் அங்குள்ள கோவிலில் அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர்.
கோபாலகிருஷ்ணன் வீட்டில் மாணவி வசித்துள்ளார். அதன்பிறகும் அவர் பாடசாலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மாணவி கர்ப்பம் ஆனதால் அவர் பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் பொலிஸார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கோபால கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.