செய்திகள்
பிரபல வர்த்தகரை சுட்டுக் கொலை செய்யத் திட்டமிட்ட இருவர் கைது

Apr 20, 2025 - 11:10 AM -

0

பிரபல வர்த்தகரை சுட்டுக் கொலை செய்யத் திட்டமிட்ட இருவர் கைது

வர்த்தகரான கம்பஹா ஒஸ்மன் குணசேகர உள்ளிட்ட குழுவினரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

அதன்படி, இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் நேற்று (19) கம்பஹாவில் சந்தேக நபர்கள் இருவர் T-56 ரக துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

அதன்படி, சந்தேக நபர்கள் 7 பேர் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05