Apr 20, 2025 - 12:28 PM -
0
போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் அந்த அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்துக்கு முன்னேறியது. குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ ஆகிய 4 அணிகளும் 10 புள்ளியை தொட்டுள்ளது. நிகர ரன் ரேட் அடிப்படையில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் குஜராத் அணி மெதுவாக பந்து வீசியது. அந்த அணியில் குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்கவில்லை. இதனால் 20ஆவது ஓவரில் அந்த அணி வெளிப்புற பகுதியில் ஒரு களத்தடுப்பில் மேலதிகமாக நிறுத்தும் வாய்ப்பை பறிகொடுத்தது.
மெதுவாக பந்து வீசியதற்காக குஜராத் அணித் தலைவர் சுப்மன் கில்லுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

