விளையாட்டு
மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை சுப்பர் கிங்ஸ்!

Apr 20, 2025 - 11:34 PM -

0

மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை சுப்பர் கிங்ஸ்!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் மும்பையில் (20) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. 

ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

அவ்வணி சார்பாக ரவீந்திர ஜடேஜா 53 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில்​ ஜஸ்பிரிட் பும்ரா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதனைத் தொடர்ந்து 177 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரோஹித் சர்மா 76 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மாத்திரம் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். 

இந்த தோல்வியின் ஊடாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளே ஒப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05