கிழக்கு
உயிரிழந்தவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவேந்தல்

Apr 21, 2025 - 11:29 AM -

0

உயிரிழந்தவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவேந்தல்


மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 06 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (21) தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவதர்சன் தலைமையில் ஏற்பாட்டினையடுத்து குண்டுவெடிப்பில் உயிரிழந்து மற்றும் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு காலை 9.05 தேவாலயத்தின் முன்பகுதியில் உயிரிழந்தவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

இந்த நினைவேந்தலையிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு கடமையில் பொலிஸார், விமானப்படையினர் ஈடுபட்டதுடன் இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05