Apr 21, 2025 - 12:37 PM -
0
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8 ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழந்து 176 ஓட்டங்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ஓட்டங்களும், ஷிவம் துபே 50 ஓட்டங்களும், ஆயுஷ் மாத்ரே 32 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வியினால் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (4 புள்ளி), எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் (16 புள்ளி) மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒரு வேளை 5 இல் மட்டும் வென்றால் (14), மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25 ஆம் திகதி மோதுகிறது.

