Apr 21, 2025 - 01:00 PM -
0
புத்தாண்டு காலத்தில் குறைந்த தேவை காரணமாக செயலிழக்கப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி இன்று (21) காலை 11.00 மணிக்கு மீண்டும் இயக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய அதிக மின் தேவைக்கு ஏற்ப மூன்று அலகுகளும் இயங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன இதனை அறிவித்துள்ளார்.

