வணிகம்
உங்கள் பணப்பையில் NDB கடனட்டை வழங்கும் சலுகைகளுடன் ஆண்டு முழுவதும் மன அமைதியை அனுபவியுங்கள்

Apr 21, 2025 - 04:42 PM -

0

உங்கள் பணப்பையில் NDB கடனட்டை வழங்கும் சலுகைகளுடன் ஆண்டு முழுவதும் மன அமைதியை அனுபவியுங்கள்

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் இலங்கையர்கள் புத்துணர்வுடன் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் NDB கடனட்டைகள் [NDB Credit Cards] பருவகால,பண்டிகைக்கால சலுகைகளுக்கு அப்பாற்பட்ட நன்மைகளை வழங்கி வருகின்றன. இந்த கடனட்டைகள் ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு எதிர்பாராத சலுகைகளுடன் கூடிய நிதியியல் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் NDBயின் கடனட்டைகள் வாடிக்கையாளர்களுக்கு சரியான தருணத்தில் வழங்கும் நன்மைகள் மற்றும் சலுகைகள் தொடர்பாக பின்வரும் செவ்வி மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

கே: இந்த புத்தாண்டு பண்டிகை காலத்தில் NDB கடனட்டைகள் எவ்வாறான நன்மைகளை எமக்கு வழங்குகின்றன? 

புத்தாண்டு என்பது வெறும் கொண்டாட்டத்தை விட வும்,மேலானது என்பதை வங்கி என்ற வகையில் நாம் அங்கீகரிக்கிறோம். புத்தாண்டானது ஒற்றுமை, புதிய தொடக்கங்கள் மற்றும் நேசத்துக்குரிய மரபுகளின் தருணமாகும். எமது வாடிக்கையாளர்கள் வரம்புகள் இல்லாது பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், அதனால்தான் NDB கடனட்டைகள் நியாயமான விலை, எளிமை மற்றும் செலவு செய்வதில் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை வழங்கும்வகையில் உங்கள் பணப்பையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அதே வேளை உங்கள் மன இறுக்கத்தை போக்கி முழுமையான மனஆறுதலை வழங்குவதை உறுதி செய்கின்றன. 

இக்கடன் அட்டையை பயன்படுத்தி ஷொப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்களிடமிருந்து 70% வரையில் பணத்தினை சேமிக்க முடியும். இதற்கிணங்க இவ்வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தமக்கு பிடித்த உணவு வகைகளை உண்பதுடன் விரும்பிய பயணத்தை மேற்கொள்ள முடியும்.அது மட்டுமன்றி எதிர்பார்ப்பிற்கு மேலான வகையில் பணத்தினை சேமித்து மகிழ்வுடன் பண்டிகையைக் கொண்டாட முடியும். இதே வேளை விலைக்கழிவுகளுக்கு அப்பால், எமது கடனட்டைகள் 36 மாதங்கள் வரையிலான நெகிழ்வான தவணைத் திட்டங்களை வழங்குகின்றன.இதன் மூலம் அட்டைதாரர்கள் செலவுகளை புத்திசாலித்தனமாக முகாமைத்துவம் செய்யவும் , பண்டிகை பருவ காலத்தில் சிறந்ததை முழுமையான நம்பிக்கையுடன் அனுபவிக்கவும் கூடியதாகவுள்ளது. 

கேள்வி: NDB கடனட்டைகளை ஆண்டு முழுவதும்பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் எவை? 

NDB கடனட்டைகள் பருவகால ஊக்குவிப்புகளுக்கு அப்பால் சென்று வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒப்பிடமுடியாத மன அமைதியுடன் கூடிய நிதியியல் பாதுகாப்பையும் வழங்குகின்றன. நீங்கள் ஷொப்பிங் செய்தாலும், உணவு உண்டாலும், பயணம் செய்தாலும் அல்லது அத்தியாவசிய செலவுகளைமேற்கொண்டாலும், எமது அட்டைதாரர்கள் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் தடையற்றதாகவும் பலனளிப்பதாகவும் மாற்றும் பிரத்தியேக சலுகைகளை அனுபவிக்க முடியும். 

• எங்கும், எந்த நேரத்திலும் 0% தவணைத் திட்டங்கள் - ஒவ்வொரு வியாழக்கிழமையும் 25 மாதங்கள் வரை மேற்கொள்ளும் எந்தவொரு கொள்வனவையும் வட்டி இல்லாத தவணைத் திட்டமாக மாற்றவும், மேலதிக செலவு இல்லாமல் நிதியியல் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்யவும் உதவுகின்றன. 

• வாராந்த அங்காடிச்சந்தை [சூப்பர் மார்க்கெட்] சேமிப்பு - ஒவ்வொரு வாரமும் முன்னணி அங்காடிச்சந்தைகளில் 30% வரை சேமிப்பை அனுபவிக்க முடியும்., வீட்டு பாவனைப்பொருட்களுக்கான ஷொப்பிங்குகள் அதிக வெகுமதிகளை வழங்குகின்றன. 

• வீடு மற்றும் இலத்திரனியல் சாதனங்களில் 0% தவணைத் திட்டங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தகர்களிடமிருந்து 36 மாதங்கள் வரையிலான தவணைத் திட்டங்களுடன் உங்கள் வீட்டை அலங்கரிக்கவும். 

• பூஜ்ஜிய எரிபொருள் மேலதிக கட்டணம் - சிக்னேச்சர் [Signature]மற்றும் இன்ஃபினைட் [Infinite] அட்டைதாரர்கள் மேலதிக கட்டணங்கள் இல்லாமல் எரிபொருள் நிரப்பும் வாய்ப்பினை வழங்குவதால் பயணத்தை கவலையற்றதாக மாற்றுகிறது. 

• உணவு சலுகைகள் - அட்டைதாரர்கள் இலவசமாக உணவருந்தும் அல்லது முன்னணி உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் 30% வரை சேமிப்பைப் பெறும் பிரத்தியேக உணவு சலுகைகளை அனுபவிக்க முடியும். 

• கல்வி, காப்புறுதி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளுக்கு 0% வட்டி - கல்வி, காப்புறுதி மற்றும் மருத்துவமனை ரசீதுகளை 12 மாத 0% தவணைத் திட்டங்களாக மாற்றுவதன்மூலம் அத்தியாவசிய கொடுப்பனவுகளில் நிதிச் சுமையைக் குறைக்க முடியும். 

• பிரத்தியேக பயண சலுகைகள் - இலவச பயணக் காப்புறுதி , விமான நிலைய ஓய்வறை அணுகல் ஆகியவற்றைப் பெறுவதுடன் மேலும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய ஹோட்டல்களில் 60% வரை சேமிப்பை அனுபவிக்க முடியும். 

கேள்வி: அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் நெகிழ்வான கட்டணத் திட்டங்கள் யாவை ? 

குறிப்பாக புத்தாண்டு போன்ற அதிக செலவுகள் ஏற்படும் காலத்தில், நிதியில் நெகிழ்வுத்தன்மை அவசியம் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். பெரிய கொள்வனவுகளின் சுமையைக் குறைப்பதற்கு, 36 மாதங்கள் வரையிலான 0% வட்டி தவணைத் திட்டங்களை நாம் வழங்குகிறோம், இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் தமது செலவுகள் தொடர்பாக திறமையாகத் திட்டமிட முடிவதுடன் அதே வேளை பருவக்காலத்தில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்க முடியும். 

NDB கடனட்டைகளின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, எந்தவொரு கொள்வானவையும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் 0% வட்டியில் 25 மாதங்கள் வரையிலான தவணைத் திட்டமாக மாற்றும் திறன் ஆகும். இதன் அர்த்தம் யாதெனில் நீங்கள் ஃபேஷன், இலத்திரனியல் சாதனங்கள் , வீட்டு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தாலும் அல்லது மருத்துவமனை ரசீதினை செலுத்தினாலும், மேலதிக கட்டணங்கள் இல்லாமல் இவற்றுக்கான செலவினை மேற்கொள்ள முடியும். இது உங்கள் விரல் நுனியில் நிதி சுதந்திரத்தை உங்களுக்கு அளிக்கிறது. 

கேள்வி: அட்டைதாரர்கள் தமது அன்றாட செலவுகளில் எவ்வாறு சேமிப்பினை மேற்கொள்ள முடியும்? 

NDB கடனட்டைகள் முன்னணி பல்பொருள் அங்காடிகளில் வாரந்தோறும் 30% வரை சேமிப்புடன், உங்கள் வரவு செலவு திட்டத்தை மேலும் நீடிக்க உதவுகின்றன. மளிகைப் பொருட்கள், புத்தம் புதிய உற்பத்திகள் அல்லது வீட்டு அத்தியாவசியப் பொருட்கள் எதுவாக இருந்தாலும், நீங்கள் குறிப்பிடத்தக்க விலைக்கழிவுகளை அனுபவிப்பதுடன் மற்றும் உங்கள் மாதாந்த செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். 

மேலதிகமாக , சிக்னேச்சர் மற்றும் இன்ஃபினைட் கடனட்டைகளில் எமது பூஜ்ஜிய எரிபொருள் மேலதிக கட்டணம் எரிபொருள் செலவுகளை நிர்வகிக்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்கிறது, இது அன்றாடப் பயணம் அல்லது நீண்ட தூர பயணத்தை மிகவும் நியாயமான விலையில் மேற்கொள்ள உதவுகிறது. 

கேள்வி: NDB கடனட்டைகள் வழங்கும் உணவு மற்றும் வாழ்க்கை முறை நன்மைகள் யாவை ? 

NDB கடனட்டைகள் மூலம் வெளியே சாப்பிடுவது சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்குகிறது. அட்டைதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களில் இலவசமாக உணவருந்தலாம் அல்லது முன்னணி உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் 30% வரை சேமிப்பை அனுபவிக்க முடியும். அது ஒரு சிறந்த உணவு அனுபவமாக இருந்தாலும், நண்பர்களுடன் சாதாரண உணவாக இருந்தாலும், அல்லது குடும்பத்துடன் ஒரு பயணமாக இருந்தாலும், உங்கள் NDB கடனட்டையானது ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மன அழுத்தமில்லாததாகவும், நியாயமான விலையில் இருப்பதையும் உறுதி செய்கிறது. 

கேள்வி: NDB கடனட்டைகள் பயணத்தை எவ்வாறு அதிக பலனளிக்கும் வகையில் மாற்றுகின்றன? 

NDB கடனட்டைகள் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு, உள்நாட்டு மற்றும் உலகளாவிய ஹோட்டல்களில் 60% வரை சேமிப்பு, இலவச பயண காப்புறுதி மற்றும் விமான நிலைய ஓய்வறை அணுகலுடன் நம்பமுடியாத பெறுமதியை வழங்குகின்றன. ஒரு தகுதியான விடுமுறை அல்லது வர்த்தக பயணத்தைத் திட்டமிட்டாலும், எமது அட்டைதாரர்கள் பெரும் நம்பிக்கையுடனும் மன அமைதியுடனும் பயணிக்க முடியும். 

கேள்வி: வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும்? 

இந்தச் சலுகைகளை அனைத்து NDB கடனட்டைதாரர்களும் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும், மேலும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வர்த்தகர்களிடம் தமது அட்டைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பிரத்தியேக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். தமது பணப்பையில் உண்மையான நன்மையை இன்னும் அனுபவிக்காதவர்கள், NDB கடனட்டைக்கு உடனடியாக விண்ணப்பிக்கவும்.தடையற்ற செலவு, பிரத்தியேக வெகுமதிகள் மற்றும் நிதியியல் நெகிழ்வுத்தன்மையின் உண்மையான நன்மையை அனுபவிப்பதற்கு இதுவே சரியான தருணமாகும். 

எமது பருவகால சலுகைகளைப் பற்றி மேலும் அறிய அல்லது NDB கடனட்டைக்கு விண்ணப்பிக்க, https://www.ndbbank.com/cards ஐப் பார்வையிடவும் அல்லது 0112 448 888 என்ற இலக்கத்தை அழைக்கவும். 

இந்தப் புத்தாண்டினை இலகுவான மனநிலையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் - ஏனெனில் NDB கடனட்டைகள்,சேமிப்பு, வசதி மற்றும் மன அமைதியை உங்களுக்கு வழங்குகின்றன. 

அஷான் விக்ரமநாயக்க - உதவி துணைத் தலைவர் / கார்ட் சென்டர் தலைவர்

Comments
0

MOST READ
01
02
03
04
05