Apr 22, 2025 - 09:49 AM -
0
மக்கள் விரும்பும் நாடாக இலங்கையை மாற்றிக் காட்டுவோம் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்திருக்கின்றது. இங்கு இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு இடமில்லை. எமது நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்திக்காக உழைக்கின்றோம். மக்கள் விரும்பும் நாடாக மாற்ற முயல்கின்றோம்.
தற்போது பல கட்சிகள் போலியான பிரச்சாரங்களை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்கள் பிரச்சனையை தீர்க்க அவர்களுடன் கைகோர்த்து நிற்கின்றோம். வடக்கிற்கு முதலாவதாக அதிக நிதியை ஒதுக்கிய கட்சி எமது தேசிய மக்கள சக்தி தான். அந்த கட்சி தமிழ் மக்களையும் கவனிக்கிறது.
கடந்த காலங்களில் வெற்றி பெற்ற அமைச்சர்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் சந்திப்பதாக இருந்தால் எவ்வளவு சிரமப்பட்டிரூப்பீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இன்று அப்படி இல்லை.
மிக விரைவில் உங்கள் வீடு தோறும் நாம் வருவோம். உஙகள் பிரச்சனைகளை கேட்போம். அதனை தீர்த்து வைப்போம். போலியான பிரச்சாரங்களை நம்பி ஏமாறாதீர்கள். வவுனியா திருச்செந்தூர் மில் வீதியை 43 மில்லியன் ரூபாய் ஒதுக்கி திருத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் உள்ளூராட்சி சபைகள் மக்களிடம் வாடகையை அறவிட்டும், வரியை அறவிட்டும் ஒரு வங்கிகள் போல செயற்பட்டன எனத் தெரிவித்தார்.
--