Apr 22, 2025 - 11:04 AM -
0
DFCC எக்ஸ்பிரஸ் வீட்டுக்கடன் மூலமாக, இலங்கையில் முதல்முறையாக விரைவாகப் பெறக்கூடிய வீட்டுகடன் திட்டமொன்றை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. வீடுகளை வாங்க விரும்புகின்றவர்களுக்கு வெறும் 10 நாட்களுக்குள் விரைவான, சிரமங்களற்ற வழியில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் புரட்சிகரமான தீர்வை இக்கடன் திட்டம் அவர்களுக்கு வழங்குகின்றது.
நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சிரமத்தைப் போக்கி, தமது கனவு இல்லங்களை நனவாக்கிக் கொள்ள விரும்புகின்றவர்களுக்கு விரைவான மற்றும் திறன்மிக்க வழியில் கடனைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த புரட்சிகரமான தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான விண்ணப்ப நடைமுறையுடன், வாடிக்கையாளர்கள் உடனடியாக நிதியைப் பெறுவதை DFCC எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன்கள் உறுதிசெய்வதுடன், வழக்கமாக 20 முதல் 30 நாட்கள் வரை எடுக்கும் நீண்ட அங்கீகார செயல்முறையைக் போக்குகின்றன. தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, 10 நாட்களுக்குள் கடன் வழங்கப்படுவதை இந்த கடன் வசதி உறுதி செய்கிறது. இது கடன் வாங்குபவர்களுக்கு விரைவான, நிச்சயமான வழியில் கடன் பெறுவதற்கு வழிவகுத்து, அவர்களுக்கு நிம்மதியளிக்கின்றது.
பாரம்பரியமாக, வீட்டுக் கடன்களுக்கான அங்கீகாரம் மற்றும் பணத்தை பெற்றுக்கொள்வதற்கு பல வாரங்கள் எடுக்கலாம். இதனால் சொத்துக்களை தமது உடமையாக்கிக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. DFCC எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன்கள் தேவையற்ற தாமதங்களைப் போக்கி, விரைவான அனுபவத்தை வழங்குகின்றன. இது வீட்டை வாங்குபவர்களுக்கு நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல இடமளிக்கின்றது. இலகுபடுத்தப்பட்ட விண்ணப்ப செயல்முறை ஆவண தேவைப்பாடுகளைக் குறைத்து, நிர்வாகச் சுமைகளைக் குறைத்து மற்றும் கடனை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கிறது.
கடன்களுக்கான அங்கீகாரங்களை மேலும் விரைவுபடுத்த, பிரபலமான சட்ட நிறுவனத்துடன் DFCC வங்கி கைகோர்த்துள்ளது. இது தங்குதடையற்ற சட்ட மற்றும் பரிமாற்ற செயல்முறைகளை உறுதி செய்கிறது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான நிதி தீர்மானங்களில் ஒன்றை முன்னெடுக்கும்போது இந்த நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் வெளிப்படையான அணுகுமுறை அவர்களுக்குத் தேவையான உத்தரவாதத்தை அளிக்கிறது. 10 நாட்களில் உத்தரவாதமாக பணத்தை வழங்குவதன் மூலம், வீட்டை வாங்குபவர்கள் மிகவும் போட்டி நிறைந்த ஆதன சந்தையில் விரைவாகச் செயல்படவும், நம்பிக்கையான தீர்மானங்களை எடுக்கவும் முடியும்.
சிரேஷ்ட துணைத் தலைவரும், தனிநபர் மற்றும் வணிக வங்கிச்சேவையின் தலைமை அதிகாரியுமான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் இந்த அறிமுக நிகழ்வில் உரையாற்றுகையில், “வீடு வாங்குவது என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும் என்பதை DFCC வங்கி தெளிவாக புரிந்துகொள்கிறது. இருப்பினும், இந்தப் பயணத்தில் பாரம்பரிய வீட்டுக் கடன்களுடன் தொடர்புடைய நீண்ட காத்திருப்பு மற்றும் சிக்கலான அங்கீகார செயல்முறைகள் பெரும்பாலும் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவான, வசதியான மற்றும் சிரமமற்ற கடன் தீர்வை வழங்குவதற்காக, இலங்கையில் முதன்முதலாக இத்தகையதொரு தனித்துவமான தீர்வாக மாறியுள்ள DFCC எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன்களை அறிமுகப்படுத்தினோம். வெறும் 10 நாட்களுக்குள் கடன் வழங்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், வீட்டை வாங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் தங்கள் கனவு வீடுகளைச் சொந்தமாக்கிக் கொள்ள விரைவாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட நாங்கள் உதவுகிறோம், என்று குறிப்பிட்டார்.
புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி ஆகியவற்றின் மீது DFCC வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பு அதன் வீட்டுக் கடன் தீர்வுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு உந்துசக்தியளிப்பதுடன், வீடுகளை வாங்க ஆர்வமுள்ளவர்கள் வீட்டு உரிமையை நோக்கி சீரான, விரைவான மற்றும் திறமையான பயணத்தை முன்னெடுப்பதை உறுதி செய்கிறது.
DFCC எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன்கள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகாமையிலுள்ள DFCC வங்கி கிளைக்கு வருகை தர முடியும் அல்லது www.dfcc.lk வழியாக இணைய வழியிலும் ஆராயலாம்.
DFCC வங்கி குறித்த விபரங்கள்
1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது.
வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 138 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 5,500 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது.
நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

